நாடெங்கிலும் 1000 தொழில்முனைவோர்களை உருவாக்குவது என்ற இலக்கை நோக்கி முன்னேறும் நேச்சுரல்ஸ் சலூன் அதன் பிராண்டு தூதராக திரைப்பட நடிகை ஸ்ரீலீலாவை நியமனம்
சென்னை: டிசம்பர் 16, 2025: தொழில்முனைவோர்களால் முன்னெடுக்கப்படும் உலகிலேயே மிகப்பெரிய சலூன் பிராண்டுகளில் ஒன்றான நேச்சுரல்ஸ் சலூன்ஸ், நடிகை ஸ்ரீலீலாவை தனது புதிய பிராண்டு தூதராக இன்று அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1,000 தொழில்முனைவோரை உருவாக்கி, 15,000-க்கும் மேற்பட்ட ஒப்பனைக் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குதல் என்ற இலக்கை நோக்கி இந்த பிராண்டு துடிப்புடன் முன்னேற்றம் கண்டுவரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒற்றைப் பிராண்ட், ஃப்ரான்சைஸ் (தனியுரிமை) அடிப்படையிலான வணிக மாதிரியில் கட்டமைக்கப்பட்ட நேச்சுரல்ஸ், இந்திய சலூன் துறையில் ஒரு முன்னோடி பிராண்டாகத் திகழ்கிறது. பெரும்பாலும் ஒழுங்கமைக்கப்படாத நிலையிலிருந்த இத்துறையை, முறையான மற்றும் தொழில்முறை வணிகச் சூழலாக மாற்றுவதில் நேச்சுரல்ஸ் முக்கியப் பங்காற்றியுள்ளது.
பிரபல திரைப்பட நட்சத்திரம் ஸ்ரீலீலாவின் நியமனம், தனது சேவை வினியோக வலையமைப்பில் நான்கு இலக்க மைல்கல்லை (1000 கிளைகள்) நேச்சுரல்ஸ் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த முக்கியமான தருணத்தில் நிகழ்ந்துள்ளது. பிராந்திய அளவில் வலுவான நிறுவனமாக தன்னை நிலைநாட்டிய பிறகு, தற்போது ஒழுங்கமைக்கப்பட்ட அழகு சேவைகளை வணிக உரிமை மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துடன் வெற்றிகரமாக இணைத்து, தேசிய அளவில் பிரபலமான சலூன் பிராண்டாக நேச்சுரல்ஸ் வளர்ச்சியடைந்துள்ளதை இது உறுதிசெய்கிறது.
பல ஆண்டுகளாக, நேச்சுரல்ஸ் வெறும் விற்பனை நிலைய விரிவாக்கத்தை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், மையப்படுத்தப்பட்ட பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் தரக் கட்டுப்பாடு அமைப்புகளை உருவாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி வந்திருக்கிறது. இந்த பிராண்டின் கீழ், சுதந்திரமான தொழில்முனைவோர்கள் நிர்வகிக்கும் சலூன்களின் மிகப்பெரிய வலையமைப்பை உருவாக்கி, தனது தனித்துவத்தை நேச்சுரல்ஸ் வெளிப்படுத்தியிருக்கிறது.
திருமதி. கே. வீணாவால் நிறுவப்பட்ட நேச்சுரல்ஸ், இந்தியாவின் பரந்த மற்றும் பன்முக நுகர்வோர் தளத்தைப் பயன்படுத்தி சீராக வளர்ந்து வருகிறது. பெருநகரங்கள் முதல் கிராமப்புற சந்தைகள் வரை ஒழுங்கமைக்கப்பட்ட தனிநபர் பராமரிப்பு சேவைகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவது இதற்கு சான்றாகும். பிராண்டின் ஃப்ரான்சைஸ் அடிப்படையிலான அணுகுமுறை, உள்ளூர் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கிறது; அத்துடன், சிகை அலங்கார, ஒப்பனைக் கலைஞர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் நீண்ட கால அடிப்படையிலான சிறந்த பணி வாய்ப்புகளை சாத்தியமாக்குகிறது. இதுவே நேச்சுரல்ஸ் – ன் வளர்ச்சிக் கொள்கையின் முக்கிய அம்சமாகும்.
பிராண்டு தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ள நடிகை ஸ்ரீலீலாவுடனான இந்த கூட்டணி, அழகுச் சேவைகள் பிரிவில் நுகர்வுக் கலாச்சாரத்தை வடிவமைத்து வரும் இளம் தலைமுறை மற்றும் மில்லினியல் நுகர்வோருடன் தனது பிணைப்பை வலுப்படுத்த நேச்சுரல்ஸ் விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது. தனது இளமைத் துடிப்பான நடிப்பு மற்றும் நாடு முழுவதும் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகை ஸ்ரீலீலா, இந்த பிராண்டின் நோக்கத்துடன் மிகச்சரியாகப் பொருந்துகிறார். இந்தியாவின் சலூன் சந்தை மிகப்பெரியதாக இருப்பினும், பெருமளவு முறைப்படுத்தப்படாததாக இருப்பதனால், பொறுப்புடன் சமகாலத்திற்கு ஏற்றதாக வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதே, நேச்சுரல்ஸ் – ன் குறிக்கோளாகும்.
ஸ்ரீலீலாவை பிராண்டு தூதராக அறிவித்ததுடன் இணைந்து, நேச்சுரல்ஸ் தனது முக்கியமான நம்பிக்கை திட்டமான “Customer First Card”-ஐயும் அறிமுகப்படுத்தியது. தொழில்முறை அழகு சேவைகளை மேலும் எளிதாகவும், பயனளிக்கும் வகையிலும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இந்த திட்டம், வாடிக்கையாளர்களை முதன்மைப்படுத்தும் நேச்சுரல்ஸின் நீண்டகால தத்துவத்தை பிரதிபலிக்கிறது. இந்த திட்டத்தின் மூலம், உறுப்பினர்கள் ஒரே ஆண்டில் ₹30,000 மதிப்புள்ள சலூன் சேவைகளை ₹20,000 மட்டும் செலுத்தி பயன்படுத்தலாம். மேலும், வசதியான EMI விருப்பங்களுடன், நாடு முழுவதும் உள்ள 900-க்கும் மேற்பட்ட நேச்சுரல்ஸ் சலூன்களில், குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த சேவைகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களுடன் நீண்டகால உறவை உருவாக்கும் நேச்சுரல்ஸின் உறுதியை இந்த முயற்சி மேலும் வலுப்படுத்துகிறது; தொடர்ந்து சுய பராமரிப்பை ஊக்குவிப்பதோடு, கண்கூடிய மதிப்பையும் வழங்குகிறது.
இந்தக் கூட்டணி குறித்து நேச்சுரல்ஸ் சலூன்ஸின் நிறுவனர் கே. வீணா கருத்து தெரிவிக்கையில், “எங்கள் முந்தைய பிராண்ட் முகங்களான – ஜெனிலியா டி சௌசா, கரீனா கபூர் மற்றும் தீபிகா பல்லிகல் – ஆகியோர் எங்கள் குறிக்கோள் சார்ந்த பயணத்தின் முக்கியமான கட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தினர். நாங்கள் எதிர்நோக்கும் நிலையில், இளம் தலைமுறையினரான Gen Z மற்றும் மில்லினியல்களின் மனம் கவர்ந்த இளமையான, துடிப்பும், இலட்சியமும் நிறைந்த ஒருவரை பிராண்டு தூதராக நியமனம் செய்ய நாங்கள் விரும்பினோம். நடிகை ஸ்ரீலீலா இதற்கு முற்றிலும் பொருத்தமானவராக திகழ்கிறார். அகில இந்திய திரைப்படங்களில் மட்டுமல்லாமல், இந்தி திரைப்பட உலகமான பாலிவுட்டிலும், அவர் நுழைந்திருப்பதால், நாங்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள பரந்த பார்வையாளர்களுடன் பிணைப்பை உருவாக்க இந்த நியமனம் எங்களுக்கு உதவும்.” என்று கூறினார்.
நேச்சுரல்ஸின் நீண்ட கால வளர்ச்சி வாய்ப்பு, இந்தியாவின் புவியியல் மற்றும் மக்கள்தொகை கட்டமைப்பில் உள்ளது என்றும், இது ஒழுங்கமைக்கப்பட்ட சலூன் சேவைகளுக்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கான வாய்ப்புகளை தொடர்ந்து வழங்குகிறது என்று குறிப்பிட்ட திருமதி. வீணா, “நாங்கள் இந்தியாவுக்குள் ஆழமான விரிவாக்கத்தையும் வேகமான வளர்ச்சியையும் உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம். 1,000 தொழில்முனைவோரையும் ஆயிரக்கணக்கான திறன்மிக்க வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டுமென்ற எமது இலட்சிய இலக்கானது, கட்டமைக்கப்பட்ட, உயர்தர சேவை பிராண்டுகளுக்கு இந்த நாட்டில் மிகப்பெரிய சாத்தியம் இருக்கிறது என்ற நம்பிக்கையை சார்ந்திருக்கிறது” என்றும் கூறினார்.
இந்தக் கூட்டணி குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நேச்சுரல்ஸ் சலூன்ஸின் பிராண்ட் தூதர் ஸ்ரீலீலா கூறியதாவது, “நேச்சுரல்ஸ், அழகு என்பதற்கும் அப்பாற்பட்ட ஒரு நோக்கத்தைக் கொண்ட பிராண்டாகும். இது வாய்ப்பு, லட்சியம் மற்றும் வாழ்வாதாரத்தை உருவாக்கும் சிறப்பான குறிக்கோளைக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான தொழில்முனைவோருக்கு வாய்ப்புகளை வழங்கி, ஆயிரக்கணக்கான ஒப்பனைக் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்கி வரும் ஒரு பிரபல பிராண்டின் அங்கமாக இணைந்திருப்பது, உண்மையிலேயே அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் இருக்கிறது.”
1,000 தொழில்முனைவோரை உருவாக்கும் மைல்கல்லைக் கடக்க நேச்சுரல்ஸ் தயாராகி வரும் நிலையில், அதன் விரிவடைந்து வரும் வலையமைப்பை வலுப்படுத்த பயிற்சி நிறுவனங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் செயல்பாட்டுச் சிறப்பில் இந்த பிராண்டு தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் அணுகல்தன்மை ஆகியவற்றில் நேச்சுரல்ஸ் உறுதியான கவனம் செலுத்துகிறது. நேச்சுரல்ஸ், இந்தியாவின் வளர்ந்து வரும் நுகர்வு மற்றும் வேலைவாய்ப்புச் சூழலுடன் இணைந்து, ஒழுங்கமைக்கப்பட்ட அழகு மற்றும் நலவாழ்வு சேவைகள் துறையில் ஒரு முன்னணி பங்களிப்பாளராக தனது நிலையை நேச்சுரல்ஸ் வலுப்படுத்தி வருகிறது.
