அம்பத்தூரில், அக்டோபர் 25ஆம் தேதி பூர்விகா அப்ளையன்சஸ் நிறுவனத்தின் 25வது கிளை C.T.H சாலை கிருஷ்ணாபுரம், மகாலட்சுமி மருத்துவமனை அருகில் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டுள்ளது

0 0
Read Time:4 Minute, 52 Second

அம்பத்தூரில், அக்டோபர் 25ஆம் தேதி பூர்விகா அப்ளையன்சஸ் நிறுவனத்தின் 25வது கிளை C.T.H சாலை கிருஷ்ணாபுரம், மகாலட்சுமி மருத்துவமனை அருகில் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டுள்ளது

அம்பத்தூர், 25 அக்டோபர் 2024: பூர்விகா அப்ளையன்சஸ் அம்பத்தூர் கிளையின் திறப்பு விழாவிற்கு பூர்விகா அப்ளையன்சஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு.யுவராஜ் நடராஜன், நிர்வாக இயக்குனர் திருமதி.கன்னி யுவராஜ் மற்றும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜோசப் சாமுவேல் MLA ஆகியோர் முன்னிலை வகித்து ரிப்பன் வெட்டி புதிய ஷோரூமை திறந்து வைத்தனர்.

இந்த விழாவில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. யுவராஜ் நடராஜன் பேசுகையில், மொபைல் போன் என்றாலே தமிழர்கள் மனதில் நம்பர்-1 இடத்தை பிடித்திருப்பது பூர்விகா நிறுவனம். இந்த நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக 475+க்கும் மேற்பட்ட ஷோரூம்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தற்போது டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை தரத்துடன் விற்பனை செய்ய பூர்விகா அப்ளையன்சஸ் அம்பத்தூரில் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

நிர்வாக இயக்குனர் திருமதி.கன்னி யுவராஜ் பேசுகையில், பூர்விகா நிறுவனத்தை நம்பர்-1 நிறுவனமாக வளர்த்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதில் நம்பர்-1 இடத்தைப் பிடித்த பூர்விகா அப்ளையன்சஸின் 25- வது ஷோரூம் அம்பத்தூரில் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

உலகத் தரம் வாய்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள் இங்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

முதற்கட்டமாக பூர்விகா அப்ளையன்சஸ் தமிழகம் முழுவதும் 100 கிளைகள் திறக்கப்பட வேண்டும் என்ற வெற்றி வேக இலக்குடன் செயல்பட்டு வருகிறோம் என்று கூறினார்.

பூர்விகா அப்ளையன்சஸ் திறப்பு விழாவையொட்டி மொபைல் போன் லேப்டாப், ஏ.சி. பிரிட்ஜ்,வாஷிங் மெஷின் உள்ளிட்ட அனைத்து விதமான வீட்டு உபயோகப் பொருட்களுக்கும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

முன் பணமே இல்லாமல் எளிய மாத தவணையில் வீட்டு உபயோகப் பொருட்களை பெற்று கொள்ளலாம்.

ரூ.12,500 எக்ஸ்சேஞ்ச் போனஸ், வாங்கும் பொருட்களின் மதிப்பு அடிப்படையில் ரூ.20,000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது, இங்கு வாங்கப்படும் வீட்டு உபயோகப் பொருட்களை இலவசமாக வீடுகளுக்கு டெலிவரி செய்யும் வசதியும் உள்ளது.

வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் நிச்சய பரிசு வழங்கப்படுகிறது,
அந்த வகையில் இந்த தீபாவளி பண்டிகைக்கும் மக்கள் எதிர்பார்புகளை நிறைவு செய்யும் வகையில் மொபைல்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை ரூ5000 ற்கு மேல் வாங்கி பூர்விகா ஃபீட்பேக் போட்டியில் பங்குபெற்று பல கோடி மதிப்புள்ள பிரம்மாண்ட பரிசு பொருட்களான Hyundai venue Car(1), RE Hunter பைக்(5), 1 லட்சம் கோல்ட் வவுச்சர்(5), 43″ ஸ்மார்ட் டி.வி(5), ரெபிரிட்ஜெரேட்டர்(5), வாஷிங் மெஷின்(5), 1.5 டன் ஏசி(5), லேப்டாப்(5), ஸ்மார்ட் ஃபோன்(70), TWS(30), 35L ஏர் கூலர்(100), சவுண்ட் பார்(5), மிக்ஸர் கிரைண்டர்(350), ரோபோ வேக்கம்(100), பேன் தவா(350), ரூ5000 வரை கிப்ட் வவுச்சர்(4550) போன்ற பல கோடி மதிப்புள்ள பிரம்மாண்ட பரிசுகள் வழங்கப்படுகிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *