சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள டாக்டர் மேத்தா குளோபல் கேம்பஸ் மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட நவீன ‘இதய பராமரிப்பு மையம்’ துவக்கம்

0 0
Read Time:5 Minute, 55 Second

சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள டாக்டர் மேத்தா குளோபல் கேம்பஸ் மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட நவீன ‘இதய பராமரிப்பு மையம்’ துவக்கம்

• திருவேற்காடு பகுதியைச் சுற்றி உள்ள மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வாரத்தில் 7 ஏழு நாளும் இதய சம்பந்தமான மருத்துவ சிகிச்சைகள் இந்த மையத்தில் அளிக்கப்படும்

• இதய அறிவியல் துறையானது மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உதவுவதோடு, ஆரம்ப நிலையிலேயே இதயம் சார்ந்த பிரச்சினைகளை கண்டறியவும் உதவுகிறது.

சென்னை, பிப்.22– 2023: இதயம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்கும் விதமாக வேலப்பன்சாவடியில் உள்ள டாக்டர் மேத்தா குளோபல் கேம்பஸ் மருத்துவமனை கேத்லேப் மற்றும் இதய நோய்க்கான தீவிர சிகிச்சை பிரிவுடன் நவீன மேம்படுத்தப்பட்ட ‘இதய பராமரிப்பு மையத்தை’ திறந்துள்ளது. இந்த மையத்தை திருவள்ளூர் கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அரவிந்த் ஐ கேர் சிஸ்டம்ஸ் திட்ட இயக்குனரும், சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரியுமான டாக்டர் எஸ். அரவிந்த் மற்றும் நடிகையும், எழுத்தாளரும், தொழில்முனைவோருமான அனு ஹாசன், வேலப்பன்சாவடி டாக்டர் மேத்தா குளோபல் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த புதிய மையம் குறித்து டாக்டர் மேத்தா இருதய அறிவியல் துறை பிரிவின் நுண்துளையீட்டு இருதயநோய் நிபுணர் டாக்டர் நரேந்திரன் கூறுகையில், வாரத்தில் 7 நாளும் செயல்படும் இந்த மையத்தில் மேம்படுத்தப்பட்ட ஜிஇ கேத்லேப், இதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கான அவசரச் சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, நுண்துளையீடு இல்லாத 2டி எகோ, டிஎம்டி, 24 மணிநேர கண்காணிப்பு வசதி மற்றும் ஈசிஜி ஆகிய வசதிகள் உள்ளன. இதயம் சார்ந்த கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அவற்றை கண்டறிவதற்கு வசதிகாக இம்மையத்தில் டாக்டர்களுக்கு உதவிடும் வகையில் ஏராளமான நவீன மருத்துவ தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. இதய சம்பந்தமான நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கான தகுந்த சிகிச்சை இந்த மையத்தின் மூலம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இது குறித்து டாக்டர் மேத்தா மருத்துவமனையின் குழும தலைவர் டாக்டர் சரவண குமார் கூறுகையில், இந்தியாவில் தொற்றாத நோய்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது, வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவைப் பொறுத்தவரை நோய்கள். காரணமாக இறப்பவர்களின் விகிதத்தில் இதயம் சார்ந்த நோய்களால் இறப்பவர்களின் விகிதம் அதிகமாக இருக்கும். எங்கள் மருத்துவமனை கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை நகரில் சிறப்பான மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. மேலும் நாங்கள் தொடர்ந்து புதுமைகளை

உருவாக்குவது மட்டுமல்லாமல், எங்கள் மருத்துவமனையை சுற்றி உள்ள பகுதி மக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் சிறப்பான மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய குறிக்கோளாகும் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மேத்தா மருத்துவமனைகளின் துணைத் தலைவர் சமீர் மேத்தா கூறுகையில், எங்கள் மருத்துவமனைகளின் மூலம் குறைந்த கட்டணத்தில் நோயாளிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் சிறப்பான மருத்துவ சிகிச்சைகளை அளித்து வருகிறோம். பல தலைமுறைகள் கடந்து சிறப்பாக செயல்பட்டு வரும் எங்கள் மருத்துவமனையானது, கடந்த 90 ஆண்டுகளில் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளது. அத்துடன் இங்கு 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளன என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *