சென்னை கிரிமால்டஸ் மருத்துவமனையின் பொன் விழா கொண்டாட்டம்- சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கினர்
தொழுநோய் என்றாலே ஓடும் மக்கள் மத்தியில் அதனை ஒரு சவாலாக எடுத்து, மக்களுக்காக சேவை மனப்பான்மையோடு சிறப்பாக பணியாற்றி இன்று அந்த நோயை விரட்டி அடித்து, அதன் மீது மக்களுக்கு இந்த ஐயப்பாட்டை போக்கிய பங்கு சென்னை செனாய்நகரில் உள்ள கிரிமால்டஸ் மருத்துவமனைக்கு உண்டு. மேலும், காசநோய், சருமநோய்க்கு சிகிச்சை அளிப்பதில் முதன்மை மருத்துவமனையாக விளங்கி வருகிறது.
அப்படிப்பட்ட பாரம்பரிய மிக்க, சென்னையில் பிரபலமாக உள்ள கிரிமால்டஸ் மருத்துவமனையின் பொன் விழா ஆண்டு கொண்டாட்டம் சேத்துப்பட்டில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் அசோசியேஷன் பாராமெடிக்கல் கல்லூரியில் நடந்தது. விழாவிற்கு மருத்துவமனையின் தலைவர் குரியன் தாமஸ் தலைமை வகித்து . இந்த விழாவில்
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கலந்து கொண்டார்
மேலும் அவர் மருத்துவமனை வளர்ச்சிக்காகவும், மக்களுக்கு சிறப்பாக மருத்துவ சேவை புரிந்தவர்களுக்கும், சேவை புரிந்து வருபவர்களுக்கும் என 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கி கெளரவித்தார்.
இந்த மருத்துவமனையின் செயல்பாட்டை பொதுமக்கள் மட்டுமல்லாது, அரசு துறை அதிகாரிகள், மருத்துவர்கள் என பலரும் பாராட்டினர். அந்த பாராட்டின் வடிவம்தான் இந்த பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் நடக்கிறது என மருத்துவமனையின் இயக்குநர் மரியநாதன் தெரிவித்தார்.