Read Time:1 Minute, 17 Second
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது விழித்தெழு
பிரபல தொழிலதிபர் துரைஆனந்த் தயாரித்து நடிக்கும் விழித்தெழு
இத்திரைப்படம் ஆன்லைன் சூதாட்டத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் பைவ்ஸ்டார் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பருத்திவீரன் சரவணன், சுஜாதா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிக்கும் இந்த படத்தை தமிழ்ச்செல்வன் இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு சிவகங்கையை சுற்றியுள்ள கிராமங்களில் நடந்து வருகிறது. துரைஆனந்த் ஏற்கனவே காயம் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இத் திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது அடுத்த ஆண்டு குடியரசு தினம் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது