இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்க
——–
சென்னையில் புதிய திறன் மேம்பாட்டு மையம்: மாஃபாய் பவுண்டேஷன் – மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க் இணைந்து துவக்கின

சென்னை, ஆக.13, 2026: மாஃபாய் குரூப் மற்றும் சியெல் ஹெச்.ஆர் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு பிரிவான மாஃபாய் பவுண்டேஷன், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க் உடன் இணைந்து, MSSW-ன் 75-வது ஆண்டு நிறைவையொட்டி, சென்னையில் உள்ள அதன் வளாகத்தில் புதிய திறன் மேம்பாட்டு மையத்தை இன்று தொடங்கியது. இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதுடன், தொழில்துறைக்குத் தேவையான திறன்களை வழங்கி, வாழ்வாதார வாய்ப்புகளைப் பெறுவதற்கான பாதைகளை உருவாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.
மாஃபாய் பவுண்டேஷனின் நிர்வாக அறங்காவலர் திருமதி ஹேமலதா ராஜன் மற்றும் MSSW தலைவர் கே.ஏ. மேத்யூ, IAS ஆகியோர் முன்னிலையில் இந்த மையம் திறக்கப்பட்டது. மேலும், இரு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.
கல்வி, சமகாலத் திறன்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்துவதற்கான ஒரு கூட்டு முயற்சியாக இந்த மையம் இருக்கும். குறிப்பாக, புதிய துறைகளில் தங்கள் எதிர்காலத்தை உருவாக்க விரும்பும் இளைஞர்களுக்கு இது பெரிதும் உதவும்.
வேகமாக மாறிவரும் வேலைவாய்ப்புச் சூழல், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்துறையின் மாறிவரும் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் போன்ற வளர்ந்து வரும் துறைகளில், தொழில்துறைக்கு ஏற்ற பயிற்சிகளை இந்த மையம் வழங்கும். செயல்முறை மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகள் மூலம், மாணவர்கள் தற்போதைய தொழில்நுட்பம் மற்றும் பணியிடத் திறன்களை வளர்த்துக்கொள்ளவும், வளர்ந்து வரும் துறைகளில் உள்ள புதிய தொழில் மற்றும் வேலைவாய்ப்புப் பாதைகள் குறித்து அறிந்துகொள்ளவும் இது உதவும். மேலும், கல்வி, வளர்ந்து வரும் தொழில்துறை தேவைகள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கவும் இந்த மையம் உறுதுணையாக செயல்படும்.
தனிநபர் திறன் மேம்பாடு மட்டுமின்றி, கூட்டு திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார முயற்சிகளுக்கான ஒரு சிறந்த கட்டமைப்பை உருவாக்குவதும் இந்த மையத்தின் முக்கிய நோக்கமாகும். பொருளாதாரத்தின் வளர்ந்து வரும் புதிய துறைகளில் அதிக இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற உதவுவதோடு, கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தவும் இந்த மையம் செயல்படும்.
இது குறித்து மாஃபாய் பவுண்டேஷனின் நிர்வாக அறங்காவலர் திருமதி ஹேமலதா ராஜன் கூறுகையில், “இளைஞர்களின் கனவுகள் மற்றும் தொழில்துறையின் தேவைகளுடன் இணைக்கும்போதுதான் திறன் மேம்பாடு உண்மையிலேயே அர்த்தமுள்ளதாக மாறும். மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க் உடனான எங்கள் கூட்டணி, மாணவர்கள் தற்போதைய நவீன திறன்களைக் கற்றுக்கொள்ளவும், தன்னம்பிக்கையை வளர்க்கவும், சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெறவும் ஒரு வலுவான தளத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது,” என்றார்.
திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களில் மாஃபாய் பவுண்டேஷனுக்கு உள்ள அனுபவத்தையும்; சமூக அறிவியல், சமுதாய ஈடுபாடு மற்றும் இளைஞர் மேம்பாட்டில் மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க்குக்கு உள்ள சிறந்த கல்வி மற்றும் நிபுணத்துவத்தையும் ஒன்றிணைத்து இந்த மையம் துவக்கப்பட்டு உள்ளது.
பின்தங்கிய சமூகங்கள் மற்றும் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்காக திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த திட்டங்களை மாஃபாய் பவுண்டேஷன் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மேலும், மாறிவரும் தொழில்துறைத் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சிகளை வழங்குவதிலும், நிலையான வேலைவாய்ப்பிற்கான வழிகளை உருவாக்குவதிலும் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மாஃபாய் பவுண்டேஷன் குறித்து
மாஃபாய் பவுண்டேஷன், மாஃபாய் குரூப் மற்றும் சியெல் ஹெச்.ஆர் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) அமைப்பாக செயல்பட்டு வருகிறது. பின்தங்கிய சமூகங்கள் மற்றும் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புத் திறன் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதில் பவுண்டேஷன் கவனம் செலுத்தி வருகிறது. தனது பல்வேறு முயற்சிகள் மூலம், பொருத்தமான திறன்களை வேலைவாய்ப்பு வாய்ப்புகளுடன் இணைத்து, நிலையான வாழ்வாதாரத்தை நோக்கிய பாதைகளை உருவாக்குவதற்கு பவுண்டேஷன் ஆதரவளித்து வருகிறது.
மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க் குறித்து
மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க் (MSSW), சென்னையில் செயல்பட்டு வரும் உயர்கல்வி நிறுவனமாகும். சமூக அறிவியல், சமூகப் பணி கல்வி, சமூக ஈடுபாடு மற்றும் இளைஞர் மேம்பாடு ஆகியவற்றில் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. தனது கல்வி மற்றும் சமூக outreach சார்ந்த பல்வேறு முயற்சிகள் மூலம், திறன்மிக்க தொழில்முறையாளர்களை உருவாக்குவதுடன், சமூக மேம்பாட்டிற்கும் MSSW பங்களித்து வருகிறது.
