ராமகிருஷ்ணா மடம் – சென்னைக்கு சுந்தரம் ஃபைனான்ஸ் வழங்கும் ‘ஸ்பிரிட் ஆஃப் மைலாப்பூர்’ விருது

0 0
Read Time:6 Minute, 30 Second

ராமகிருஷ்ணா மடம் – சென்னைக்கு
சுந்தரம் ஃபைனான்ஸ் வழங்கும் ‘ஸ்பிரிட் ஆஃப் மைலாப்பூர்’ விருது

சென்னை: ஜனவரி 20, 2025: இந்தியாவின் பிரபல நிதி நிறுவனமான சுந்தரம் ஃபைனான்ஸ் லிமிடெட், 2025-ம் ஆண்டுக்கான கௌரவம் மிக்க ஸ்பிரிட் ஆஃப் மைலாப்பூர் விருதை சென்னை, ராமகிருஷ்ணா மடத்திற்கு வழங்கி கௌரவித்திருக்கிறது. 125 ஆண்டுகளுக்கும் அதிகமாக மைலாப்பூரின் வளர்ச்சிக்கு குறிப்பாக கலாச்சாரம், கல்வி மற்றும் உடல்நல பராமரிப்பு ஆகிய பிரிவுகளில் மிகப்பெரிய பங்களிப்புகளை வழங்கியதற்காக இந்த அங்கீகாரம் ராமகிருஷ்ணா மடத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. சுந்தரம் ஃபைனான்ஸ் லிமிடெட் – ன் தமிழ்நாடு செயல்பாடுகளுக்கான தலைவரும், நிறுவனத்தின் முதுநிலை துணைத்தலைவருமான திரு. மோகன் வெங்கடேசன், சமீபத்தில் நிறைவடைந்த சுந்தரம் ஃபைனான்ஸ் மைலாப்பூர் திருவிழா, 2025 நிகழ்வின்போது இவ்விருதை ராமகிருஷ்ணா மடத்திற்கு வழங்கினார்.
சென்னை மாநகரின் மிக தொன்மையான, மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க மைலாப்பூரின் பாரம்பரிய மற்றும் கலாச்சாரத்திற்கு தனிச்சிறப்பான பங்களிப்புகளை செய்திருக்கின்ற அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை கொண்டாடி, கௌரவிப்பதற்காக 2009-ம் ஆண்டில் முதன் முறையாக ஸ்பிரிட் ஆஃப் மைலாப்பூர் விருதை சுந்தரம் ஃபைனான்ஸ்; நிறுவியது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்ற சுந்தரம் ஃபைனான்ஸ் மைலாப்பூர் திருவிழா நிகழ்வின்போது, இவ்விருது தகுதி வாய்ந்த நபருக்கு / அமைப்புக்கு தரப்படுகிறது.
1897-ம் ஆண்டில், சுவாமி ராமகிருஷ்ணானந்தா அவர்களால் நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மடம், தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் கிளை என்ற பெருமை இதற்கு இருக்கிறது. மைலாப்பூரில் மிக முக்கியமான ஆன்மீக வளாகமாக இந்த மடம் வளர்ச்சியடைந்து, மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. சமூக நிலைமாற்றத்திற்கான ஒளிவிளக்காக இருந்து வரும் இம்மடத்தின் செல்வாக்கும், சேவைகளும் கல்வி, உடல்நலம் மற்றும் சமூக சேவை என பல்வேறு பிரிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சென்னை மாநகரின் மிக முக்கிய ஆன்மீக மையமாக புகழ் பெற்றிருக்கும் இம்மடம், அன்னை சாரதா தேவி உட்பட, எண்ணற்ற சாதுக்களையும், ஆன்மீக சாதனையாளர்களையும் வரவேற்றிருக்கிறது. தனது போதனைகளின் வழியாக, பல தலைமுறையினருக்கு ஊக்கமும், உத்வேகம் வழங்கியிருக்கும் ராமகிருஷ்ணா மடம் இப்போதும் அப்பணியை தீவிரமாக செய்து வருகிறது.
விவேகானந்தா நூற்றாண்டு மேநிலைப்பள்ளி, ஸ்ரீராமகிருஷ்ணா மட தேசியப்பள்ளி போன்ற கல்வி நிறுவனங்கள் வழியாக, கல்வி தளத்தில் ராமகிருஷ்ணா மடம் ஆற்றி வரும் பங்களிப்புகள் நாடறிந்தவை. கல்விசார் நேர்த்தி மற்றும் நல்ல பண்புகளை வளர்த்தெடுத்தல் ஆகியவற்றை இலக்காக கொண்ட நூற்றாண்டு நூலகம் மற்றும் விவேகானந்தா புத்தக வங்கி போன்ற ஆதாரவளங்களின் மூலம் கல்விசார் சமூகத்தையும் இந்த மடம் செழுமையாக்கி வருகிறது.
சுகாதார துறையில், தொழுநோய், மறுவாழ்வு மையத்தையும் மற்றும் சாரிட்டபிள் மருத்துவமனையையும் நடத்தி வரும் இம்மடம், பொருளாதார ரீதியில் வசதியற்ற நபர்களுக்கு இலவச அல்லது மிகக்குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சையை வழங்கி வருகிறது. பேரிடர் நிவாரண முயற்சிகளிலும் தீவிர பங்காற்றியிருக்கும் இந்த அமைப்பு, மனிதாபிமான சேவையில் அதன் தளராத பொறுப்புறுதியை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.
20 ஆண்டுகளுக்கும் அதிகமாக வசதி குறைவான, கிராமப்புறங்களைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு இலவசமாக ஒரு ஆண்டு செவிலியர் உதவியாளர் கல்வித்திட்டத்தையும் இந்த மடம் வழங்கி வருகிறது. நகர மருத்துவமனைகளில், பணி வாய்ப்புகளை பெறுவதற்கும் இதன்மூலம் நிலையான வருவாயையும், அத்தியாவசிய வாழ்வாதார வாய்ப்புகளையும் பெறுவதற்கு இப்பயிற்சி அவர்களுக்கு திறனதிகாரம் அளிக்கிறது.
ஸ்பிரிட் ஆஃப் மைலாப்பூர் விருது, இதற்கு முந்தைய ஆண்டுகளில் பல சிறப்பான சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ராயர்ஸ் மெஸ், சமஸ்கிருத கல்லூரி, எஸ்எஸ்வி பாடசாலா, விஜயா ஸ்டோர்ஸ், ராசி சில்க்ஸ், திரு. ராமனாதன் கிருஷ்ணன், பிஎஸ். மேநிலைப்பள்ளி, டப்பா செட்டி கடை மற்றும் புரொஃபசர் ஆர். ராமச்சந்திரா ஆகியோர் இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *