தமிழகத்தில் உள்ள 38,000 நியாய விலைக்கடையிலும் தீபாவளிக்கு தங்கு தடையின்றி பாமாயில், பருப்பு உள்ளிட்டவை வழங்கப்படும்.
அனைத்து நியாய விலைக் கடைகளிலும் போதுமான அளவு பொருட்கள் உள்ளன. பொருட்கள் இல்லை என்ற நிலை எங்கும் இல்லை.
மாதம் 25 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினோம். மத்திய ஆரசால் தமிழகத்திற்கு வழங்கப்படும் கோதுமை அளவு அக்.1 முதல் 8 ஆயிரம் டன்னிலிருந்து 17 ஆயிரத்து 100 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் 499 ரூபாய்க்கு 15 மளிகை பொருட்கள் அடங்கிய அமுதம் பிளஸ் மளிகை தொகுப்பு விற்பனை திட்டத்தை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள அமுதம் மக்கள் அங்காடியில் இந்த திட்டத்தை இன்று காலை அமைச்சர் சக்ரபாணி துவக்கி வைத்தார். பண்டிகை காலங்களை கவனத்தில் கொண்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் 15 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய அமுதம் பிளஸ் மளிகை தொகுப்பு திட்டத்தில் மஞ்சள் தூள் 50 கிராம், உப்பு 1 கிலோ,கடுகு 125 கிராம், சீரகம் 100 கிராம், வெந்தயம்100 கிராம், சோம்பு 50 கிராம், மிளகு 50 கிராம், மிளகாய் 250 கிராம், தனியா 500 கிராம், புளி 500 கிராம் உளுத்தம் பருப்பு 500 கிராம், கடலைப்பருப்பு 200 கிராம்,பாசிப்பருப்பு 200 கிராம்,வறு கடலை 200 கிராம், பெருங்காயத்தூள் 15 கிராம் ஆகியவை தொகுப்பில் வைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இன்று சென்னையில் கோபாலபுரம் உட்பட 10 அமுதம் நியாய விலை கடைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
*மாதம் 25 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினோம். மத்திய ஆரசால் தமிழகத்திற்கு வழங்கப்படும் கோதுமை அளவு அக்.1 முதல் 8 ஆயிரம் டன்னிலிருந்து 17 ஆயிரத்து 100 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசி ஆலைகளின் எண்ணிக்கையை 700 ஆக உயர்த்தியுள்ளோம்.
அரசி ஆலைகளில் நவீன எந்திரங்களை பயன்படுத்துவதால் பழுப்பு கருப்பு நிறம் இல்லாத அரசியை நியாய விலைக் கடைகளில் வழங்குகிறோம்
ஆட்சிக்கு வந்த பின் புதிதாக 17 லட்சம் குடும்ப அட்டைகள் கொடுத்துள்ளோம்
2300 நியாய விலைக்கடைகள் பிரித்து புதிதாக உருவாக்கியுள்ளோம்.
வெளிச்சத்தையில் மளிபைப் பொருள் வாங்காமல் அமுதம் அங்காடியில் வாங்குவதால் மாதம் தோறும் 1000 முதல் 1500 வரை மக்கள் சேமிக்கின்றனர்.
தமிழகத்தில் 100 அமுதம் அங்காடிகள் புதிதாக தொடங்கப்பட உள்ளன.
அமுதம் அங்காடிகளுக்கான இடத் தேர்வு குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆட்சியர்களின் கருத்துகளை பெற்று புதிதாக 100 இடங்களில் அமுதம் அங்காடிகள் உருவாக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 38 ,000 நியாய விலைக்கடையிலும் தீபாவளிக்கு தங்கு தடையின்றி பாமாயில், பருப்பு உள்ளிட்டவை வழங்கப்படும்.
தீபாவளியை முன்னிட்டு நியாய விலைக் கடைகளுக்கு வரும் பொதுமக்களை காக்க வைக்க கூடாது , பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு அறிவிறுத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 17,000 மெட்ரிக் டன் கோதுமை மத்திய அரசு வழங்க உள்ளது.
தீபாவளிக்கு தங்கு தடை இன்றி நியாய விலை கடைகளில் பொருட்கள் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது.
துவரம் பருப்பு 65 சதவீதமும், பாமாயில் இலவச சதவீதமும் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று விட்டது.
அனைத்து நியாய விலைக் கடைகளிலும் போதுமான அளவு பொருட்கள் உள்ளன. பொருட்கள் இல்லை என்ற நிலை எங்கும் இல்லை.