தனிஷ்க்கின் மிஆ தமிழ்நாட்டில் தனது செயல்பாடுகளை விரிவுப்படுத்தும் வகையில் நான்கு பிரம்மாண்டமான புதிய விற்பனை நிலையங்களை தொடங்குகிறது!
சென்னை, 3 மே 2024: இந்தியாவின் நவநாகரீக மற்றும் விலையுயர்ந்த நகை ப்ராண்ட்களில் ஒன்றாக முன்னிலை வகிக்கும் மிஆ பை தனிஷ்க் [Mia by Tanishq], இந்த அட்சய திருதியையின் மங்களகரமான தருணத்தை கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டின் சென்னை மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களில் நான்கு தனித்துவமான புதிய விற்பனை நிலையங்களை தொடங்கி இருக்கிறது. இந்த புதிய விற்பனை நிலையங்களின் விரிவாக்கமானது, தமிழ்நாட்டில் மிஆ பை தனிஷ்க் தனது சில்லறை விற்பனையை மேலும் வலுவப்படுத்தும் செயல்பாட்டு யுக்தியாக மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தனது புதுமைத்துவமிக்க நுட்பமான கைவினைத்திறன் மற்றும் சமகாலத்தில் புதிய பாணியை மக்களிடையே பிரபலப்படுத்தும் வடிவமைப்புகள் மூலம், மிஆ தனது வலுவான விற்பனை செயல்பாடுகளை கலாச்சார செறிவுக்காக பெயர்பெற்ற தமிழ்ந்நாட்டில் விரிவுபடுத்த களமிறங்கி இருக்கிறது. இந்த செயல்பாட்டு விரிவாக்க முயற்சியானது மிஆ ப்ராண்டின் இளமைத் துள்ளல் மிகுந்த குணாதிசயத்தையும், தனக்கென ஒரு ஆளுமையை எல்லோருக்கும் எளிதில் கிடைக்க செய்கிற ப்ராண்டின் தனித்துவத்தையும் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது.
செயல்பாட்டு யுக்தியின் அடிப்படையில், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் பரவலாக தொடங்கப்படுவதால், இந்த நான்கு பிரம்மாண்ட விற்பனை நிலையங்கள், மிஆ-வின் சில்லறை வர்த்தகப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. மேலும், ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் எளிதில் நவநாகரீக நகைகளைப் பெறுவதை சாத்தியமாக்குவதையும், அவர்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட நகை வாங்கும் அனுபவங்களை வழங்குவதையும் மிஆ பெரும் அர்ப்பணிப்போடு மேற்கொள்வதை எடுத்து காட்டும் வகையிலும் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய விற்பனை நிலையங்கள் கீழ்கண்ட முகவரிகளில் அமைந்திருக்கின்றன :
மிஆ பை தனிஷ்க், 180, புரசைவாக்கம் ஹை ரோடு, கெல்லிஸ், கீழ்ப்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600010 [Mia by Tanishq, 180, Purasaiwakkam High Road, Kellys, Kilpauk, Chennai, Tamil Nadu 600 010
மிஆ எழுதிய தனிஷ்க், ‘எண்: 464 (9) காந்தி நிலையம், பி.என். சாலை, திருப்பூர் – 641602 (புஷ்பா தியேட்டர் அருகில்) [Mia by Tanishq, ‘No: 464 (9) Gandhi Nilayam, P N Road, Tiruppur – 641 602 (Near Pushpa Theatre)
மிஆ எழுதிய தனிஷ்க், எண்: 8, 3வது குறுக்குத் தெரு, கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை, தமிழ்நாடு 600020 [Mia by Tanishq, No: 8, 3rd Cross Street, Kasturba Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600 020]
மிஆ பை தனிஷ்க், கதவு எண்:42, பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, ஜி-23, வேளச்சேரி மெயின் ரோடு, வேளச்சேரி, சென்னை, தமிழ்நாடு 600 042 [Mia by Tanishq, Door No:42, Phoenix Market City, G-23, Velachery Main Road, Velachery, Chennai, Tamil Nadu 600 042]
இந்த அனைத்து புதிய விற்பனை நிலையங்களையும் மிஆ பை தனிஷ்க் நிறுவனத்தின் வணிகத் தலைவர் ஷியாமளா ரமணன் [Ms. Shyamala Ramanan, Business Head, Mia by Tanishq] மற்றும் தனிஷ்க்கின் ஜூவல்லரி பிரிவு பிராந்திய வர்த்தக மேலாளர் – தெற்கு திரு. நரசிம்மன் ஒய்.எல் [Mr. Narasimhan YL, Regional Business Manager, Jewellery Division, South] ஆகிய அந்தந்த விற்பனை நிலையங்களின் வணிக கூட்டு பங்குதாரர்களுடன் இணைந்து இருவரும் தொடங்கி வைத்தனர். அட்சய திருதியையின் மங்களகரமான தருணத்தில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் விற்பனை நிலையங்களின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், மிஆ தயாரிப்புகளுக்கு 20%* வரையிலான தொடக்க விழா தள்ளுபடியையும் [up to 20%* off on Mia products] அறிவித்துள்ளது. இந்தச் சலுகை மே 5-ம் தேதி வரை நான்கு புதிய விற்பனை நிலையங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
இந்த விற்பனை நிலையங்கள் மொத்தம் 3,550 சதுர அடி பரப்பளவில் மிகப்பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் நவீன மற்றும் சமகால 14 காரட் மற்றும் 18 காரட் மதிப்பிலான பல்வேறு வடிவமைப்புகளிலான நகைகள் இடம்பெற்றுள்ளன. கண்களைக் கவரும் வண்ண கற்கள், ஜொலிக்கும் தங்கம், பளபளக்கும் வைரம் மற்றும் பிரகாசிக்கும் வெள்ளி ஆகியவற்றில் செய்யப்பட்ட மிஆ -வின் மிக நேர்த்தியான நகைகளின் தொகுப்புகள் இங்கு விற்பனைக்குள்ளன. காதணிகள், தோடுகள், விரல் மோதிரங்கள், வளையல்கள், கம்மல்கள், பதக்கங்கள், கழுத்தணிகள் மற்றும் மங்களசூத்திரங்கள் [earrings, studs, finger rings, bracelets, ear cuffs, pendants, neckwear & Mangalsutras] ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளிலான நகைகள் பல்வேறு ரசனைகளைக் கொண்ட வாடிக்கையாளர்களின் எதிர்பார்புகளை பூர்த்தி செய்யும் வகையில் விற்பனைக்கு தயாராக உள்ளன. தனது நவ நாகரீகமான மற்றும் தனித்துவமான நகைத்தொகுப்புகளுக்கு பெயர் பெற்ற ப்ராண்டாக திகழும் மிஆ பை தனிஷ்க், அதிக வேலைப்பாடுகள் இல்லாத, ஸ்டைலின் அசத்தலான வெளிப்பாட்டுடன் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட சில குறிப்பிடத்தக்க வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது. மிஆ விற்பனை நிலையங்களில் பழைய தங்கத்திற்கு பதிலாக புதிய தங்க நகைகளை வாங்கும் தங்கப் பரிமாற்றத் திட்டத்தை அனைவருக்கும் எளிதாக்கும் வகையில் காரட்மீட்டர் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட நகை வாங்கும் அனுபவத்தை வழங்குவதற்காக மிஆ-வின் பணியாளர்கள் பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விற்பனை நிலையங்களில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் பிரபஞ்சத்தின் மீதான ஈர்ப்பின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட 14 காரட் தங்கத்தில் நகைகள் 200-க்கும் மேற்பட்ட வடிமைப்புகளுடன் தனிஷ்க் பை மியா-வின் ‘ஸ்டார்பர்ஸ்ட்’ நகைத்தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உங்களது வாழ்க்கையின் சிறப்பான தருணங்களைக் கொண்டாடுவதற்கு ஏற்ற நகைகளில் தனித்துவமான மற்றும் அர்த்தமுள்ள விருப்பத்தேர்வுகளை வழங்கும் சாலிடேர் [‘Solitaires’] நகைகளையும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் சமீபத்திய அவ்ரம் [Aurum] நகைத்தொகுப்பு 18 காரட் மதிப்புள்ள சர்வதேச மற்றும் நவீன தங்க நகைகளின் ஏராளமான வடிவமப்புகளையும் வழங்குகிறது. அட்சய திருதியையை முன்னிட்டு, வார்லி கலையின் அழகியல் கலந்த வசீகரம், களிமண் பானைகளின் பழமையான அழகியல், பழங்குடியினரின் உருவ கருத்தாக்கங்களின் மிக நுணுக்கமான அழகு, பச்சை வண்ண மாங்காயின் புத்துணர்ச்சியூட்டும் உணர்வு, மண்டல ஓவியங்களின் கோட்டுருவாக்கங்கள் என இவற்றையெல்லாம் அடிப்படையாக கொண்டு நவீன பெண்களுக்காக 22 காரட் தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட, ‘நேட்டிவ்’ நகைத்தொகுப்பையும் [‘Native’ collection] இந்த பிராண்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. பாராம்பரியத்தையும், சமகால போக்குகளிலான பாணிகளையும் மிகச்சரியாக ஒருங்கிணைத்து வடிவமைக்கப்பட்ட நகைத்தொகுப்பாகவும் இது அமைந்திருக்கிறது.
தொடக்க விழாவில் பேசிய மிஆ பை தனிஷ்க் நிறுவனத்தின் வணிகத் தலைவர் ஷியாமளா ரமணன் [Ms. Shyamala Ramanan, Business Head, Mia by Tanishq] மற்றும் தனிஷ்க்கின் ஜூவல்லரி பிரிவு பிராந்திய வர்த்தக மேலாளர் – தெற்கு திரு. நரசிம்மன் ஒய்.எல் [Mr. Narasimhan YL, Regional Business Manager, Jewellery Division, South] ஆகிய இருவரும், ‘’கடந்த ஆண்டு, தமிழ்நாட்டில் மட்டும் 12 புதிய மிஆ பை தனிஷ்க்கின் பிரத்தியேக விற்பனை நிலையங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதற்கு வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்திருக்கும் அமோகமான வரவேற்பு எங்களை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. இங்குள்ள நவீனயுக யுவதிகளின் பேரன்பினால் உற்சாகமடைந்த நாங்கள் நேற்று முதல் இன்று வரை சென்னை(3), திருப்பூர்(1) ஆகிய நகரங்களில் 4 புதிய விற்பனை நிலையங்களை திறக்க இருக்கிறோம். எங்களது விற்பனை நிலையங்கள் அனைவருக்கும் ஏற்ற, தங்களுக்கு பிடித்த நகைகளைத் தேர்ந்தெடுக்க உதவும் வகையில், இளஞ்சிவப்பு மற்றும் தங்கம் ஆகியவற்றின் இதமான அரவணைப்புடன் கூடிய 2000-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளைக் கொண்ட புதையல் பெட்டியைப் போல் உங்களுக்காக காத்திருக்கிறது’’
’’இன்றைய பெண்களின் தேவையையும், எதிர்பார்புகளையும் அவர்களின் ஆளுமையின் நீட்சியாக இருக்கும் நகைகளை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் மிஆ மிக நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறது. எங்கள் தயாரிப்புகள் அதிக எடையில்லாத, அணிவதற்கு மென்மையான நகைகளாக இருப்பதோடு நவநாகரீகமான, நவீனத்துவமிக்க வடிவமைப்புகளுடன் அவர்களின் விருப்பங்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு நகையும் அதைப் பார்ப்பவர்களை மீண்டும் ஒரு முறையாவது திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு தனித்துவமானதாக இருப்பதோடு, வெவ்வேறு ஆடைகளுடன் அணியக்கூடிய அளவுக்கு பல்வகை அழகியலுடன் இருக்கின்றன. இந்த அட்சய திருதியை உங்களுக்கு அபரிமிதமான மகிழ்ச்சி, பெரும் வளம் மற்றும் செழிப்பை வழங்கவேண்டும் என பெரும் உற்சாகத்துடன் உங்களை வாழ்த்துவதோடு, எங்களின் புதிய மற்றும் அனைத்து விற்பனை நிலையங்களுகுக்ம் நீங்கள் வருகை தந்து உங்களுக்கு மிகவும் பிடித்த நகையை வாங்கி வாழ்க்கையின் செழிப்பை கொண்டாட அழைக்கிறோம்!” என்றார்கள்.
மிஆ பை தனிஷ்க் பற்றி:
தனிஷ்க்கின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத் தன்மை கொண்ட மிஆ, கம்பீரமான, நவீன மற்றும் கவர்ச்சியான நகை பிராண்ட் ஆகும். இளைஞர்கள், மனதால் இளமைத் தன்மையுடன் இருப்பவர்கள் மற்றும் ஸ்டைலானவர்களுக்காக, மியா தனித்துவமான, சிறந்த மற்றும் மிகவும் பலவகை வடிவமைப்புகளில் தங்க நகைகளை வடிவமைத்து வழங்குகிறது. பரந்த வகை வரம்புகளைக் கொண்ட, மிஆ-வின் தொகுப்புகள் ஒவ்வொரு தருணத்திற்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் எளிதிலும் அழகாகவும் உங்களை அலங்கரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 18 காரட் மற்றும் 14 காரட் தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட மிஆ-வின் வைர நகை வரம்பில் ரூ. 4999/-* என்ற தொடக்க விலை முதல், 2500-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகள் உள்ளன. மிஆ, இந்தியாவில் 70 நகரங்களில் 180-க்கும் மேற்பட்ட தனி விற்பனை நிலையங்களின் கட்டமைப்பபைக் கொண்டுள்ளது. மேலும், துபாயில் பர்ஜுமன் சென் டரில் செயல்பட்டு வரும் மிஆ-வின் விற்பனை நிலையம் [Burjuman Centre, Dubai] இதன் சர்வதேச செயல்பாட்டை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்து சென்றிருக்கிறது. அத்துடன் தனிஷ்க் விற்பனை நிலையங்களிலும் இது கிடைக்கும்.
பிரதான இணையதள பக்கமான https://www.miabytanishq.com/ மற்றும் பிற இணைய தளங்களான https://www.amazon.com/,https://www.tatacliq.com/மற்றும் https://www.flipkart.com/ போன்றவற்றிலும் வணிக செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.
உங்களது நகைகளை தூய்மையாக மாற்ற இலவசமாக சுத்தப்படுத்தும் வசதி, வாழ்நாள் வரை பரிமாற்றம் செய்யும் சேவை, உத்திரவாதம் மற்றும் தரம் ஆகியவற்றை வழங்குவதன் மூலம், மிஆ ஈடு இணையற்ற வாடிக்கையாளர்கள் சேவைகளை வழங்குகிறது. அருகிலுள்ள மிஅ விற்பனை நிலையங்களுக்கு இப்போதே செல்லுங்கள். அல்லது இணையத்தில் சென்று பாருங்கள்.
*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது