லக்காசா ஸ்டோரைச் சென்னையில் தொடங்குவதன் மூலம் வாடிக்கையாளர் அனுபவத்தை ஹிந்வேர் மறுவரையறை செய்கிறது
சென்னை, செப்டம்பர் 2023: சானிட்டரிவேர் மற்றும் குழாய்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஹிந்வேர் இன்று அதன் எக்ஸ்பீரியன்ஷியல் ஸ்டோரான லக்காசாவை தமிழ்நாட்டின் சென்னையில் தொடங்கியுள்ளது. அதியுயர் தொழில்நுட்பத்தைத் தனித்துவம் மிக்க வடிவமைப்புடன் இணைத்து இந்த ஸ்டோர் ஒரு திக்குமுக்காடவைக்கும் பயணத்தை வழங்குகிறது. அழகுடன் வசதியை தடைகளின்றி ஒருங்கிணைக்கும் இணையற்ற ஷாப்பிங் அனுபவத்தைத் தேடுவோர்க்கு இந்த ஸ்டோர் நிறைவை வாரிவழங்குகிறது.
ஆடம்பர பிராண்டான குயூயோ, பிரீமியம் பிராண்டான ஹிந்வேர் இத்தாலிய கலக்ஷன் – ஹிந்வேர் – ஐக்கானிக் பிராண்ட் ஆகிய பிராண்ட்களின் சானிட்டரி வேர்கள், குழாய்கள், வெல்னஸ் மற்றும் ஷவர் என்குளோசர்கள் ஆகியவற்றின் பரந்துபட்ட கலக்ஷனை இந்த ஸ்டோர் கொண்டுள்ளது. இந்த ஸ்டோருக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அதியுயர் தொழில்நுட்ப வடிவமைப்புகளைக் காண்பதோடு, காட்சிப்படுத்தலின் ஒரு பகுதியாக ஒரு குளியலறை எப்படி இருக்கவேண்டும் என்பதையும் கண்டு அனுபவித்து உணரலாம். இந்த ஸ்டோரில் ஹிந்வேர் பற்றிய அறிவு மிக்க நிபுணர் குழுவையும் சந்திக்கலாம். வாடிக்கையாளர்களின் தேவைகளையும் முன்னுரிமைகளையும் அடிப்படையாகக் கொண்டு அவர்கள் தங்கள் தேவைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு இந்தக் குழு உதவி செய்யும்.
இந்தப் புதிய ஸ்டோர் மாநகரின் இதயப்பகுதியான தியாகராய நகரில் உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 2580 சதுர அடிகள். இந்த ஸ்டோர், நிறுவன விற்பனை துணைத்தலைவரான திரு. ராகேஷ் நாயர்மற்றும்ஹிந்வேர் லிமிடெடின் மார்கெட்டிங் துணைத்தலைவர் செல்வி அருணிமா யாதவ் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் தற்போது ஹிந்வேர் லிமிடெடின் 40 பிராண்ட் ஸ்டோர்கள் உள்ளன. இவற்றில் 11 சென்னையில் இருக்கின்றன. இந்த மாநிலத்தில் தன் இருப்பை மேலும் விரிவுபடுத்த இந்த நிறுவனம் தொடர்ந்து முதலீடுகளை செய்வதற்கு உறுதிபூண்டுள்ளது.
ஹிந்வேர் பாத்வேரின் தலைமைச் செயல் அதிகாரியான திரு. சுதான்ஷு போக்ரியால் பேசும்போது, “வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு முடிவெடுக்குமுன் எங்கள் தயாரிப்புகளைப் பற்றி முற்றிலுமாக அறிந்துகொள்ளும் வாய்ப்பிற்கான நுழைவாயிலாகவே நாங்கள் எங்கள் லாக்காசா ஸ்டோர்களைப் பார்க்கிறோம். தற்கால குளியலறை வடிவமைப்பையும் செழுமையையும் பற்றிய மூழ்கடிக்கும் அனுபவத்தை இந்தக் கடைகள் வழங்குகின்றன. உயிர்த்துடிப்பு மிக்கச் சென்னை மார்க்கெட், வடிவமைப்பு மற்றும் லைஃப்ஸ்டைல் ஆர்வலர்களின் முக்கிய மையமாகத் திகழ்வதால் அனுபவத்தை உயர்த்துவதில் நாங்கள் அளிக்கும் அர்ப்பணிப்பு மேலும் கூடுதலான முக்கியத்துவத்தை அடைகிறது.” என்றார்
தொடக்கவிழாவில் பேசிய ஹிந்வேர் லிமிடெடின் மார்க்கெட்டிங் துணைத் தலைவரான செல்வி. அருணிமா யாதவ் கூறினார்: “சென்னையில் லாக்காசா ஸ்டோரைத் தொடங்குவதில் நாங்கள் மிகவும் உற்சாகம் அடைகிறோம். எங்கள் வாடிக்கையாலர்களுக்கு இணையற்ற அனுபவத்தை வழங்கும் எங்கள் அர்ப்பணிப்புக்கு இது ஒரு சாட்சியாக விளங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு எங்கள் கதவுகளை நாங்கள் திறக்கும்போது, எதிர்பார்ப்புகளை மறுவரையறை செய்யும் வாய்ப்பைத் தழுவுகிறோம். பாத்வேர் தொழில்துறையில் புதிய உயரங்களைத் தொடுகிறோம்.”
ஹிந்வேருக்கு விரிவான விநியோக மற்றும் சேவை நெட்வொர்க் உள்ளது. 470+ இமெர்சிவ் பிராண்ட் ஸ்டோர்களும், 34,000 க்கும் மேற்பட்ட ரீடைல் டச்பாயிண்டுகளும், வாடிக்கையாளர் அடித்தளமான 1200+ நிறுவனங்களும் உள்ளன. இந்தியாவின் 700+ மாவட்டங்களிலும் பரந்து கிடக்கும் 650+ தொழில்வல்லுநர்களின் சேவை வலைப்பின்னல் ஆதரவு உள்ளது. பெருநகர்ப் பகுதிகளில் 24 மணி நேரத்திலும் உட்பகுதிகளில் 48 மணிநேரத்திலும் துரிதமான ஆதரவை வழங்குவதற்கு ஹிந்வேர் உத்தரவாதம் அளிக்கிறது.