ஒற்றுமைக்கான புது முயற்சியில் கண்டறி… மீட்பு… புத்தாக்கம்

0 0
Read Time:5 Minute, 32 Second

ஒற்றுமைக்கான புது முயற்சியில் கண்டறி… மீட்பு… புத்தாக்கம்

கண்டறி… மீட்பு… புத்தாக்கம் ( Find.. Rescue… Recover..) எனும் கொள்கைகளை இலட்சியமாகக் கொண்டு இயங்கி வரும் ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பு( UNITED SAMARITAN INDIA FOUNDATION ) இந்தியா அறக்கட்டளை‌ சார்பில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு, புத்தக வெளியீடு, கண் தான சான்றளிப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்று திறனாளிகளை கௌரவப்படுத்தும் நிகழ்வு மற்றும் கலை நிகழ்ச்சிகள் ‘ஒற்றுமைக்கான புது முயற்சி’ ( ‘The Togetherness Initiative ) எனும் பெயரில் சோழிங்கநல்லூரில் உள்ள முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(Mohamed Sathak college Arts and science ,Sholinganallur) வளாகத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

முன்னாள் மிஸ் தமிழ்நாடு டாக்டர் ஷீபா லூர்தஸ் (Dr.Sheeba Lourdhes )தலைமையில் இயங்கிக் கொண்டு இருக்கும்
ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பு ஒருங்கிணைக்கும் இவ்விழாவிற்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. ராகுல் நாத்,(Thiru.A.R.Rahul Nath IAS-District collector chengalpattu )இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாட்டு துணைத்தலைவரான திரு சங்கர் நாகநாதன் (Thiru.Sankar Naganathan )ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். இவர்களுடன் தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திர நடிகரான பப்லு பிருத்விராஜ்(Actor Babloo Prithiviraj ), இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்(Music Director James vasantham ), நடிகை ரேகா நாயர் (Actress Rekha Nair )உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் I AM TOUGH… BECAUSE I AM GOOD & MAGIC OF QUIET EGO எனும் இரண்டு உளவியல் புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

முகமது சதக் கலை & அறிவியல் கல்லூரிகள்(Mohamed sathak college of arts &science), ஆசான் மெமோரியல் கலை & அறிவியல் கல்லூரி(Adan Memorial college of arts &sciene)), சென்னை கிறிஸ்தவ கல்லூரி(Madras christian college)., காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரி(the Quaide Milleth college for men ) ஆகிய நான்கு கல்லூரியைச் சேர்ந்த 2500 மாணவ மாணவிகள் தங்களுடைய கண்களை தானமாக பெறுவதற்கு ஒப்புதல் அளித்திருந்தனர்.அதற்கான‌ சான்றிதழ் கல்லூரிகளுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

தனி திறமைகளால் ஜொலிக்கும் 25க்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கௌரவப்படுத்தும் வகையில் விருது வழங்கப்பட்டது.

ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பு (UNITED SAMARITAN INDIA FOUNDATION) இந்தியா அறக்கட்டளை அமைப்பின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான டாக்டர் ஷீபா லூர்தஸ் (Dr.Sheeba Lourdhes ) இயக்கத்தில் உருவான ‘ எடனர்ல் கிஃப்ட் ‘(Eternal Gift ) எனும் குறும்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது.ETERNAL GIFT என்கிற ஷார்ட் பிலிம் ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பின் மூலம் 25க்கும் மேற்பட்ட உலக திரைப்பட விழாக்களில் இந்தியா சார்பாக பங்கேற்க உள்ளது.

இதைத் தவிர்த்து வருகை தந்திருக்கும் பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் துறை உயர் அதிகாரி திருமதி பி சுபா நந்தினி(Tmt.P.Subha Nandhini,District Revenue officer,chengalpet ), ‌ கண் மருத்துவ நிபுணர் டாக்டர் எம் ஆர் சித்ரா(Dr.M.R.Chitra ,Director -RIO,chennai ), தாம்பரம் மாவட்ட வருவாய் துறை உயர் அதிகாரி திரு வி செல்வகுமார்(Thiru.V.Selva kumar ,Revenue Divisional officer,Tambaram) முகமது சதக் கலை அறிவியல் கல்லூரியின் இயக்குனர் ஜனா எஸ் எம் ஏ ஜே அப்துல் ஹலீம்(Mr.Janab.S.M.A.J.Abdul Hake,Director Mohamed sathak college of arts and science), தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல இயக்கத்தின் உறுப்பினரும் பேராசிரியருமான திரு தீபக் நாதன்(Mr.Deepak Nathan,Member TN Differently abled welfare board,professor ), செங்கல்பட்டு மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆன திரு புலவர் ஆர் மாணிக்கம்(Thiru.Pulavar .R.Manickam,IRCS Dist seceratary,chengalpattu ) உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *