மகத் அறக்கட்டளை சார்பாக இந்திய ஒற்றுமை பயணம்
பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வரும் மகத் அறக்கட்டளை சார்பாக மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது
அறக்கட்டளையின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் ராமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் தர்மேஷ் தன்னா, மாநில பொருளாளர் திலாரா உள்ளிட்ட தமிழக முழுவதும் இருந்த நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடேச ராமராஜ்
மகத் அறக்கட்டளை இந்தியா முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களை செய்யும் அகில இந்திய அமைப்பு என்றும்,
குறிப்பாக ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஆதரவற்ற பெண்களுக்கு உதவுவது போன்ற மக்கள் சார்ந்த பணிகளை செய்து வருவதாக கூறினார்
அதன் தொடர்ச்சியாக தற்போது மதம்,இனம்,சாதி அடிப்படையில் அரசியல் காரணங்களுக்காக மக்களிடையே ஒற்றுமையில்லாமல் இருப்பதாகவும் எனவே வரும் காலங்களில் எங்களது நிர்வாகிகள் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் சென்று சாதி மதங்களைக் கடந்து அனைவரும் இந்தியர் என்ற ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்ள இருப்பதாகவும், இதற்கான பணிகள் கிராமங்கள் முதல் வார்டு வரையில் செயல்படுத்த இருப்பதாக தெரிவித்தார்