பிரபல தனியார் கொரியர் நிறுவனமான எஸ்டி கொரியர் நிறுவனம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
எஸ்டி கொரியர் நிறுவனம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்து 16ஆம் ஆண்டு தொடங்கப்படுவதை கொண்டாடும் விதமாக ராயப்பேட்டை எஸ்டி கொரியர் அலுவலகத்தில் ராயப்பேட்டை அலுவலக உரிமையாளர் பாலகிருஷ்ணன் உடன் இணைந்து அந்நிறுவனத்தின் மேலாளர் முகமது ஜாவித் கேக் வெட்டி கொண்டாடினார்…..
அதனைத் தொடர்ந்து அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு உதவும் விதமாக அரிசி, துணிகள், ரொக்கம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன அதனைத் தொடர்ந்து ராயப்பேட்டை பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு அன்னதானம் வழங்கப்பட்டது
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்டி கொரியர் நிறுவனத்தின் மேலாளர் முகமது ஜாவித்
எஸ்டி கொரியர் நிறுவனம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்து 16ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதற்குக் காரணம் சிறந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருப்பதினால் இது சாத்தியமானதாக கூறினார்
ராயப்பேட்டை அலுவலக உரிமையாளர் எதையும் சிறப்பாக செயல்படுத்த கூடியவர் இந்நிகழ்ச்சியையும் அவர் சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறார் என பாராட்டினார்
மேலும் எஸ்டி கொரியர் நிறுவனம் புயல் மழை கொரோனா தொற்று காலம் என அனைத்து இயற்கை பேரிடர் காலத்திலும் மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததனால் இந்த வெற்றி சாத்தியமானதாக தெரிவித்தார்…