எய்ட்ஸ் விழிப்புணர்வு கானா பாடல் குறுந்தகடு வெளியீடு !
சென்னை :
சென்னையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கானா பாடல் குறுந்தகடு வெளிடப்பட்டது.
டிசம்பர் 1ல் உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து இந்திய சமுதாய நல்வாழ்வு அமைப்பு (ICWO) தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் இளையோர் எய்ட்ஸ் விழிப்புணர்வு கானா பாடல்கள் அடங்கிய குறுந்தகடு மற்றும் விழிப்புணர்வு சுவரொட்டி வெளியீட்டு விழா சென்னை எழும்பூரில் உள்ள
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க வளாகத்தில் நடைபெற்றது.
இளையோர் எய்ட்ஸ் விழிப்புணர்வு சென்னை கானா பாடல்கள் அடங்கிய குறுந்தகடை
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் திட்ட இயக்குனர் ஹரிஹரன் வெளியிட தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் துணை இயக்குனர் டாக்டர் எம்.ஜானகிராம் மற்றும் நிர்வாக அதிகாரி எஸ்.கிறிஸ்டி மற்றும் துணை இயக்குநர் பூங்கொடி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.