உலக முதியோர் தினத்தை முன்னிட்டு RMD மருத்துவமனைகள் தங்கள் புதிய பிரிவான RMD CARE (பிரத்தியேக உதவி மையம்/முதியோர் பராமரிப்பு மையம்) கிளையை துவங்கியுள்ளது.
RMD மருத்துவமனைகள் முதியோர் பராமரிப்பில் இதுவரையிலும் ஒரு லட்சம் நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளது.
சென்னை, 3 அக்டோபர் 2022. Soulful innovative Care Private Limited(RMD CARE ) இன்று முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கு பராமரிப்பு வழங்குவது குறித்து அதன் முறையான முயற்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நலிந்த பிரிவில் உள்ள மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன், முதியோர்களுக்கான சர்வதேச தினத்தில் (UNIDOP) இப்புது முயற்சி தொடங்கப்பட்டது. இந்த புதிய கிளையின் துவக்கத்தின் ஒரு பகுதியாக லயன்ஸ் கிளப்புடன் இணைந்து ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவிகளை RMD வழங்கவுள்ளது.
கெளரவ விருந்தினர் டாக்டர்.பி.ஜோதிமணி அவர்கள் (தலைவர், தமிழ்நாடு மாநில திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு குழு), எம்.எல்.ஏ கருணாநிதி (தி.நகர் தொகுதி) தலைமையில் கலைமாமணி சிங்கம் டாக்டர்.சி அவர்களின் திறமையான வழிகாட்டுதலின் கீழ் இக்கிளையின் துவக்க விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மணிலால் (தலைவர்-உலக அமைதி மற்றும் நட்பு கவுன்சில்) தவிர தொழில்துறை தலைவர்கள், தொழில்துறையினர் மற்றும் பிரபலங்கள் உடன் பொதுமக்கள் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஆர்எம்டி நிறுவனர் டாக்டர். ரிபப்ளிகா ஸ்ரீதர்,
“இன்றைய நிலையில் மிகவும் தேவைப்படும் முதியவர்களுக்கான பராமரிப்புப் பிரிவில் எங்கள் சேவைப்பயணத்தைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பல வசதிகள், பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர் சமூகத்தின் உதவி மற்றும் ஈடுபாட்டுடன், தங்கள் அன்றாட வாழ்வின் நடவடிக்கைகளை நிர்வகிக்க முடியாத முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கான உதவிகளை மலிவாக அவர்களால், அணுகக்கூடிய வகையில் பராமரிப்பு பிரிவில் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வோம் நாங்கள் நம்புகிறோம். இந்த முன்முயற்சியின் மூலம், பக்கவாதம், அல்சைமர், டிமென்ஷியா, புற்றுநோய் மற்றும் படுக்கையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு (ADL) உதவி தேவைப்படும் வயதானவர்களுக்கு RMD சிறப்பான உதவி வழங்கும். அடுத்த நான்கு ஆண்டுகளில், இந்த வகையில் 500 படுக்கை நோயாளிகளுக்கான உதவிகளை வழங்க விரும்புகிறோம். இந்த துறையில் முதலீடு செய்வது, பெரிய அளவிலான வேலை வாய்ப்பை வழங்குவதோடு, மக்களின் தேவைகளை பெருமளவு பூர்த்தி செய்ய உதவும் எனவும் நம்புகிறோம் என்றார்.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சமூகத் தேவைகளை அங்கீகரிப்பதில் தமிழக அரசு எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள முதிய வயதினர்களில் ஏறக்குறைய 13.5% முதியவர்கள் பலர் தனிமையில் உள்ளனர் மற்றும் அவர்களுக்கு மருத்துவ உதவி பெருமளவில் தேவைப்படுகிறது. அதனை சிறப்பாக வழங்குவதால், தமிழ்நாடு இந்தியாவின் சுகாதார தலைநகரம் என்றும் பொருத்தமாக அழைக்கப்படுகிறது.
நிர்வாக மட்டத்தில், இந்த புதிய முயற்சியின் செயல்பாடுகள், நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் ரிபப்ளிகா ஸ்ரீதர், திருமதி ஸ்ருதி ஸ்ரீதர், திரு.இம்மானுவேல், திரு.ஸ்ரீகுமார் மற்றும் திரு விஷால் ஆகியோருடன் RMD இன் மருத்துவக் குழுவுடன் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்படுத்தப்படும்.
RMD மருத்துவ நிறுவனம் பற்றி:
சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மற்றும் பொதுப் பிரிவினருக்கு மலிவாகவும் மற்றும் அணுகக்கூடிய வகையிலும் ஆரோக்கியத்தை வழங்குவதில் RMD 1994 முதல் முன்னோடியாக இருந்து வருகிறது. . RMD கடந்த 2 தசாப்பங்களாக அதன் மருத்துவமனை மற்றும் அதன் ஆதரவு நிறுவனங்களுடன் இணைந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முதியோர் மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை நோயாளிகளுக்கு உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி, பராமரிப்பு சேவைகளில் ஒரு பெரிய முன்னேற்றத்தை வழங்குகிறது மேலும் மாநிலம் முழுவதும் நன்கு இயங்கும் பராமரிப்பு மையங்களின் தேவையையும் இது இணைக்கிறது.