ஸ்டடி ஆஸ்திரேலியா கண்காட்சி, மாணவர்கள், கல்வித் தலைவர்கள் மற்றும் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கிறது
இந்த விளம்பர பிரச்சாரம், ஆஸ்திரேலியாவில் கல்வி கற்றல் பற்றிய பொருத்தமான தகவல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
· இது, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வித் தலைவர்களுக்கு அரசாங்க அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளுடன் ஊடாடுவதற்கும் , படிப்புகள், விசாக்கள் மற்றும் உதவித்தொகைகள் குறித்த அவர்களது சந்தேகங்களைத் தீர்ப்பதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கியது.
· ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் வழங்கும் பல்வேறு விருப்பங்களிலிருந்து மாணவர்கள் தேர்வுசெய்ய, அந்த இடத்தில் உள்ள ஊடாடும் தொழில்-பொறுத்துபவர் மற்றும் பாடத் தேர்வாளர் உதவினார்கள்.
சென்னை, செப்டம்பர் 16, 2022: சென்னையில் வெள்ளிக்கிழமை அன்று ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையம் (ஆஸ்திரேலிய அரசு நிறுவனம்) ஏற்பாடு செய்த ஸ்டடி ஆஸ்திரேலியா விளம்பர பிரச்சாரத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வித் தலைவர்கள் நன்கு கலந்து கொண்டனர்.
இந்திய மாணவர்களின் உலகளாவிய வாழ்க்கையை வடிவமைக்க மாதிரி வகுக்கப்பட்ட ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் முன்முயற்சிகளை இந்த முன்னிலைப்படுத்துகை எடுத்துக்காட்டுகிறது. 26க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளுடன் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வித் தலைவர்கள் உரையாடுவதற்கான வாய்ப்பாக இந்நிகழ்வு அமைந்தது.
ஸ்டடி ஆஸ்திரேலியா ரோட்ஷோ நிகழ்வுகள் கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட ஐந்து இந்திய நகரங்களில் செப்டம்பர் 12 முதல் 22 வரை நடைபெறும்.
இந்த நாள் முழுவதும் நடைபெற்ற நிகழ்ச்சி, ஆஸ்திரேலியாவின் கல்வி சிறப்பை வெளிக்காண்பித்தது மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி ஆலோசகர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரின் ஈடுபாட்டை எளிதாக்கும் வகையில் நடைபெற்றது. இது, ஆஸ்திரேலியாவில் படிப்பதைத் தீர்மானிக்கும் முன் மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கியது.
மாணவர்கள் தங்களுக்கு எந்தப் பாடத்திட்டம் சிறந்தது என்பதைத் தீர்மானிக்க உதவும் வகையில், கேரியர் மேட்ச்சர் ஸ்கிரீனை அந்த இடத்தில் கொண்டிருந்தது – இந்தக் கருவி மாணவர்கள் தங்கள் ஆர்வப் பகுதிகளை பாடநெறி வழங்கல்களுடன் பொருத்த உதவியது. அதற்கேற்ப பல மாணவர்கள் பங்கேற்கும் பல்கலைக்கழகங்களை அணுகினர்.
இந்த முன்முயற்சிகள் பற்றி பேசும்பொழுது ஆஸ்திரேலிய அரசாங்கத்தின், ஆஸ்திரேலியன் ட்ரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் கமிஷன் (ஆஸ்ட்ரேட்) தெற்காசியாவின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையர் திரு அப்துல் எக்ராம், “இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படிக்க வரும்பொழுது சிறந்த முடிவுகளை எடுப்பதை உறுதிசெய்ய நாங்கள் அவர்களுடன் நெருக்கமாக பணியாற்றுகிறோம். இந்த ஸ்டடி ஆஸ்திரேலியா பிரச்சாரம் ஆனது, மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி ஆலோசகர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட, நம்பகமான மற்றும் பொருத்தமான தகவல்களை வழங்கியது. ஆஸ்திரேலியா, உலகத் தரம் வாய்ந்த கல்வி, வலுவான வாழ்க்கைப் பாதைகள் மற்றும் மாணவர்களுக்கு இணையற்ற வாழ்க்கை முறையை வழங்குகிறது.” என்று கூறினார்.
இந்த விளம்பர பிரச்சாரம், பங்கேற்பாளர்களுக்கு மாணவர் விசாவைப் பெறுவதற்கான செயல்முறை மற்றும் ஆஸ்திரேலிய விசாக்கள் மற்றும் குடிநுழைவு அதிகாரிகளிடமிருந்து படிநிலை வழி பற்றிய தெளிவான பதில்களை வழங்கியது. ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள், உதவித்தொகை, மாணவர் வாழ்க்கை மற்றும் நாட்டில் உள்ள பாதுகாப்பு பற்றிய விரிவான தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர். சமீபத்தில், ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களில் உள்ள தற்போதைய இந்திய மாணவர்களுக்கு, அவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்காக ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையத்தின் ” தி ஸ்டடி ஆஸ்திரேலியா இண்டஸ்ட்ரி எக்ஸ்பீரியன்ஸ் ப்ரோக்ராம் (SAIEP)” தொடங்கப்பட்டது.
பல ஆண்டுகளாக, உலகத் தரம் வாய்ந்த கல்வி, படிப்புக்குப் பிந்தைய வேலை வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றிற்காக ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2021 டிசம்பர் நடுப்பகுதியில் எல்லை மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து 22 ஜூலை 2022 வரை, 260,000 க்கும் மேற்பட்ட விசா வைத்திருக்கும் மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளனர்.
ஸ்டடி ஆஸ்திரேலியா மற்றும் இந்திய மாணவர்களுக்கான ஆதரவு பற்றிய கூடுதல் தகவல்கள் https://www.studyaustralia.gov.au/india இல் கிடைக்கின்றன