சுற்றுப்புற சூழல் மற்றும் புவி சமநிலை தொடர்பாக இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் ‘வெமா’(WEMAAA)
இந்தியாவில் முதன்முறையாக நூற்றுக்கணக்கிலான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்று கூடி, சமூக முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, விவசாய துறையின் புத்தாக்கம் உள்ளிட்ட பல துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமான சீர்திருத்தங்கள் குறித்தும், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்தும், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தரவுகள், அறிவியல் ரீதியான புதிய கண்டுபிடிப்புகள் என பலவற்றை பரிசீலனை செய்து, விவாதிக்கும் வகையில் மாநாடு ஒன்று ‘வெமா’(WEMAAA) எனும் பெயரில் சென்னையில் நடைபெற்றது. இந்தியாவில் இயங்கும் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதி ஆதாரத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த மாநாட்டில், இந்தியா மட்டுமல்லாமல் பல சர்வதேச நாடுகளில் இருந்து முந்நூறுக்கும் மேற்பட்ட பன்னாட்டு பெரு நிறுவனங்கள், முந்நூறுக்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், 100க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள், நூற்றுக்கும் மேற்பட்ட அரசாங்க உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் மற்றும் புவி சமநிலை தொடர்பான பல்வேறு கருத்துருக்கள், சமூக அறிவியல் விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் கூற்றுப்படி அடுத்து வரும் 15 முதல் 20 ஆண்டுகாலம், புவியின் இயல்பு நிலைக்கு சவாலான காலம் என ஆராய்ந்து அறிவித்திருக்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு நம்முடைய அடுத்த தலைமுறையினர் ஆரோக்கியமான… சுகாதாரமான சுற்றுச்சூழல் மற்றும் புவி வெப்பமடைதலின் சமநிலை தொடர்பாக பல ஆயிரம் வருடங்களுக்கு முன் அகஸ்திய முனிவர் அருளிச்சென்ற விசயங்களை, தற்போதுள்ள சூழலுக்கு ஏற்றவாறு எளிதாக நடைமுறைப்படுத்துவது குறித்த விவாதம், பல்வேறு கோணங்களில் நடைபெற்றது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஜூலை மாதம் 19 ஆம் தேதியான இன்று மாலை 6:00 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விவசாயிகள், விஞ்ஞானிகள், பொதுமக்கள் மற்றும் இந்த புவியின் நலன் குறித்து முன்வைக்கும் சிறந்த இரண்டு திட்டங்களை தேர்ந்தெடுத்து, அதற்காக 45 லட்ச ரூபாய் மற்றும் நான்கு கோடி ரூபாய் நிதியை நன்கொடையாக அளிக்கப்பட்டது.
பொதுமக்கள், விவசாயிகள், நுகர்வோர், அதிகாரிகள், ஆட்சியாளர்கள் ஆகிய ஒரு சாராருக்கும், கார்ப்பரேட் எனப்படும் பெறு நிறுவனங்களுக்கும் இடையேயான உறவை… நிதி ஆதாரப் பகிர்வை … செம்மையாக செயல்படுத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்று கூடிய இந்த மாநாட்டில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்… சமூக மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்காக ஆற்றி வரும் செயல்கள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் விரிவாகவும், விளக்கமாகவும் விவாதிக்கப்பட்டது.
தன்னார்வ தொண்டு பணியில் பன்னிரண்டு துறைகளில் பத்தாண்டிற்கும் மேற்பட்ட அனுபவம் கொண்டிருக்கும் சங்கமாஸ் சர்வதேச தொண்டு நிறுவனத்தின் தரவுகள் பிரிவு நிபுணர் ( Strategic Analyst) சுனிஷ் எஸ். தேவன் (SUNEESH S DEVAN,SANGAMAAS INTERNATIONAL), இந்திய இயற்கை விவசாயிகள் சங்கத்தின் தலைவரான எஸ் முருகேசன் (S.MURUGESAN), சமூக பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களுக்கான மன்றத்தின் தலைவர் மைக்கேல் அஞ்சலோ ஜோதிராஜன்(MICHAEL ANJELLO JOTHIRAJAN), மூத்த குடிமக்கள் ஆதரவு அமைப்பின் செயலாளர் ஆர் சுப்பாராஜ்(R.SUBBARAJ), சங்கமாஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக பிரதிநிதி லலிதா சுனீஷ்(LALITHA SUNEESH) மற்றும் சுதீஷ் எஸ் தேவன்(SUDISH S.DEVAN), நியூ லைஃப் இந்தியா அறக்கட்டளை நிறுவனத்தின் நிர்வாக பிரதிநிதி ஸ்டீபன் ராஜ்(STEPHEN RAJ), கிராமப்புற வளர்ச்சி சங்கத்தின் நிர்வாகப் பிரதிநிதி கே கார்த்திகேயன்(K.KARTHIKEYAN) ,Rural developing (RDS) MANAGING TRUSTEE K.KARTHIKEYAN ,SUBHIMA FARMER PRODUCER COMPANY RAPHEL RAJ உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பு பணிகளை சிறப்புற மேற்கொண்டனர்.
இந்த மாநாட்டின் சிறப்பு அம்சங்கள்….
* புவியியல் மாற்றங்கள்
* பஞ்சபூத சீற்றங்கள்
* நவீன வேளாண்மை மூலம் நஞ்சில்லா உணவு தயாரிக்கும் முறைகள்
* சுற்றுப்புற சூழலை பேணி பராமரித்தல்
* நோயற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குதல்
* சிறந்த தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல்
* நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளை பயன்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வை உண்டாக்குதல்
* ரசாயன உரங்களினால் ஏற்படும் தீமைகள் மற்றும் பக்க விளைவுகளை விளக்குதல்
* மண்களில் புதைந்திருக்கும் கார்பன் துகள்கள் பற்றிய ஆய்வுகளை மேம்படுத்துதல் மற்றும் முறைப்படுத்துதல்
* பாரம்பரிய பொருளாதார மற்றும் வணிக நடைமுறைகளை மீண்டும் சீர்படுத்தி அமல்படுத்துதல்.
என பல்வேறு விசயங்கள் குறித்து விரிவாகவும், விளக்கமாகவும், வித்தியாசமாகவும் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக அறிஞர்கள் பலர், தங்களது ஆய்வு ரீதியிலான கட்டுரைகளையும், களத்தில் பெற்ற அனுபவத்தினூடான உரையாடல்களையும் முன் வைத்தனர்.
மேலும் இந்த மாநாட்டில் வெற்றியின் முக்கோண தன்மை, பொது மக்களுக்கும், அரசு மற்றும் அரசாங்கத்திற்கும் இடையேயான தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தொடர்ச்சியான முக்கோண சேவை, தற்சார்பு கிராம பொருளாதாரத்தின் முக்கோண வடிவம், பண்டைய மக்கள் வெற்றி பெற்ற மதிப்பு அடிப்படையிலான அமைப்பின் முக்கோணத் தன்மை, விவசாயத்துறையில் பேரிழப்பை ஏற்படுத்தி வரும் கார்பன் துகள்களை அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வினை, பெரு நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து ஏற்படுத்துவது குறித்த முக்கோண வடிவ நடைமுறை குறித்தும் விரிவாக கலந்துரையாடலும், நிபுணர்களின் பேச்சும் இடம்பெற்றது.
“ ‘வெமா’ மாநாடு குறுகிய நேரமே நடைபெற்றாலும், இதனுடைய தாக்கம் உலக அளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்” என இந்த மாநாட்டிற்கு வருகை தந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது எண்ணத்தை பதிவு செய்திருக்கிறது.
மாநாடு தொடர்பாக வருகை தந்திருந்த பெரு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பேசுகையில், ” இதுபோன்ற மாநாடுகளால் பெரு நிறுவனங்கள் தங்களிடம் உள்ள சி.எஸ்.ஆர். எனப்படும் சமூக பொறுப்புணர்வு நிதியை முழுமையாகவும், முதன்மையாகவும் ஒதுக்கீடு செய்து, நாட்டின் வளர்ச்சிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும்” என்றனர்.
மேலும் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இளம் விஞ்ஞானிகள் பேசுகையில், ” வெமா மாநாடு எங்களைப் போன்ற இளம் விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலை அளித்திருக்கிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் விருப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாநாடு அனைத்து தரப்பு மக்களிடமும், சரியானதொரு அதிர்வை உரிய தருணத்தில் ஏற்படுத்தி, நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்லும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
இந்த மாநாடு தொடர்பான முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள… என்ற இணையதள முகவரியை கிளிக் செய்யவும். மேலும் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புவோர் https://www.sangamaasfoundation.com/. என்ற ஆன்லைன் இணையதளங்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.