இந்திய குடியரசு கட்சி (அ) பிரிவின் சார்பாக மாநில தலைவர் கிருஷ்ணகுமார் அவர்களின் தலைமையில் வளசரவாக்கத்தில் புதிய திரைத்துறை அலுவலகம் திறக்கப்பட்டது. பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக மாநில தலைவர்,
முதல் கட்டமாக எங்களுடைய KGF புரொடக்ஷன் டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் நீதிமான் படம் எடுக்க உள்ளன. KGF புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் மல்லேஸ்வரராவ் மற்றும் இயக்குனர் ராவ் விவேகானந்தர் ஆகியோர் மூலமாக ஒரு உண்மை சம்பவத்தை ஒரு நல்ல கருத்தோடு மக்களிடையே எடுத்துக் கொண்டு சேர்க்கவுள்ளோம். இதற்கு பொதுமக்களின் ஆதரவும் பத்திரிக்கையாளர்களின் ஆதரவும் எங்களுக்கு தேவை. இந்த அரசாங்கத்தில் எங்களைப் போன்ற புதிய தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு தேவை. இந்த படத்தில் புதிய இயக்குனர்களுக்கும் புதுமுக நடிகர் நடிகைகளுக்கும் வாய்ப்பு தருகிறோம் என்று இந்த நேரத்தில் தெரியப்படுத்துகிறேன்.
மேலும் திரை துறையின் மற்ற மாநிலங்களில் இருப்பது போல நம் மாநிலத்திலும் வாரியம் அமைக்க இந்த அரசாங்கத்தை வேண்டி வலியுறுத்துகிறோம். இதனை ஆரம்பிக்க முக்கியமான காரணம் என்னவென்றால் பணம் இருப்பவர்களுக்கும், அதிகாரம் இருப்பவர்களுக்கும் தான் திரைத்துறை என்ற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் முதல் முறையாக திரைத்துறையில் கால் பதித்துள்ளோம். அவ்வாறான துன்பங்கள் இடையூறுகள் திரைத்துறையினரின் புது முகங்களுக்கு ஏற்படாமல் அவர்களுக்கான ஒரு பொக்கிஷமான இடமாக இதை இப்போது ஆரம்பித்து இருக்கிறோம். அந்த புதிய கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக எங்கள் அலுவலகம் செயல்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைத்து ஜாதியினருக்கும் உரித்தான அம்பேத்காரின் செய்திகளை உள்ளடக்கிய உலகம் போற்றும் நீதிமான் படத்தில் நிறைய வித்தியாசமான கருத்துக்களையும், உண்மை சம்பவங்களையும் கொண்டு வர உள்ளோம். இந்த நீதிமான் படப்பிடிப்பு இன்னும் 10 நாட்களில் ஆரம்பிக்க உள்ளது. புதிய கலைஞர்களுக்கு மட்டுமே இங்கு வாய்ப்புகள் அதிகம்.
திரைத்துறை என்றால் பல பிரச்சனைகள் இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு அவ்வாறான பிரச்சனைகள் எல்லாம் ஏற்படாமல் இருக்க நாங்கள் எத்தகைய போராட்டத்திலும் இறங்குவோம், எங்கள் கட்சியின் ரீதியாகவும், திரை உலகின் ரீதியாகவும் எத்தகைய போராட்டத்தையும் சந்திப்போம், அவர்களுக்கு ஒரு நல்வழி கிடைக்கும் வரை. எத்தனையோ பேர் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.