சென்னையில் நடைபெற்ற ‘ரெட்டிகான்’ நிகழ்வு!
விழித்திரை அறுவைசிகிச்சைகளில் முன்னேற்றங்கள் மீதான இந்தியாவின் மிகப்பெரிய கருத்தரங்கு

0 0
Read Time:7 Minute, 26 Second

சென்னையில் நடைபெற்ற ‘ரெட்டிகான்’ நிகழ்வு!
விழித்திரை அறுவைசிகிச்சைகளில் முன்னேற்றங்கள் மீதான இந்தியாவின் மிகப்பெரிய கருத்தரங்கு

மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் திறனதிகாரத்துறை அமைச்சர் திருமதி. P. கீதா ஜீவன் இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.
இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் 1,000-க்கும் அதிகமான கண் அறுவைசிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர்.

சென்னை, 8 மே 2022: டாக்டர் அகர்வால்ஸ் ரெட்டினா ஃபவுண்டேஷனால் விழித்திரை அறுவைசிகிச்சை மீது நடத்தப்படும் இந்தியாவின் மிகப்பெரிய வருடாந்திர கருத்தரங்கான ரெட்டிகான் – ன் 12வது பதிப்பு இன்று சென்னையில் சிறப்பாக நடத்தப்பட்டது. விழிப்படிக – விழித்திரை கோளாறுகளை கண்டறிவதிலும் மற்றும் அதற்கான சிகிச்சை மேலாண்மையிலும் நிகழ்ந்துள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய அறிவை பகிர்ந்துகொள்வதற்காக இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் 1000-க்கும் அதிகமான கண் மருத்துவ நிபுணர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் திறனதிகாரத்துறை அமைச்சர் திருமதி. P. கீதா ஜீவன், குத்து விளக்கை ஏற்றி வைத்து இக்கருத்தரங்கு நிகழ்வை தொடங்கி வைத்தார். டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் புரொஃபசர் டாக்டர். அமர் அகர்வால், அதன் செயலாக்க இயக்குநர் மற்றும் மருத்துவ சேவைகள் துறையின் தலைவர். டாக்டர். அஸ்வின் அகர்வால் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்று விழிப்படிக – விழித்திரை கோளாறுகள் மேலாண்மையில் சமீபத்திய சிகிச்சை உத்திகள் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடுகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர். விழித்திரைக்கான மருத்துவம், விழித்திரைக்கான அறுவைசிகிச்சை, விழிப்படிக – விழித்திரை அறுவைசிகிச்சை, மற்றும் விழித்திரை தொடர்பான பிற முக்கிய அம்சங்கள் போன்ற தலைப்புகள் மீது பல பிரபல வல்லுநர்கள் பங்கேற்ற அமர்வுகள் இந்நிகழ்வில் இடம்பெற்றன. பங்கேற்பாளர்கள் பார்த்து பயனடைவதற்காக அறுவைசிகிச்சை நிபுணர்கள் மேற்கொண்ட விழித்திரை அறுவைசிகிச்சை நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் புரொஃபசர் டாக்டர். அமர் அகர்வால், இந்நிகழ்ச்சியில் உரையாற்றியபோது கூறியதாவது: “விழிப்படிக – விழித்திரை அறுவைசிகிச்சையில் சமீபத்திய புத்தாக்க முன்னேற்றங்கள் பற்றி அறிந்துகொள்வதற்கான இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏறக்குறைய 1000-க்கும் அதிகமான கண் அறுவைசிகிச்சை நிபுணர்கள் பங்கேற்ற ரெட்டிகான் கருத்தரங்கின் 12-வது பதிப்பு மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறது. விழித்திரை நோய்கள், அவைகளின் மேலாண்மை மற்றும் சிகிச்சை தொடர்பாக மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள விரைவான முன்னேற்றங்கள் அதிக பயனுள்ளதாகவும் மற்றும் அனைவரும் பெற்று பயனடையக்கூடியதாகவும் ஆகி வருகின்றன. எனினும், விழித்திரை கண் மருத்துவவியலில் திறன்மிக்க நிபுணர்களின் கடுமையான பற்றாக்குறையால் இந்தியா பெரிதும் அவதியுறுகிறது. மருத்துவ சிகிச்சையின் விளைவுகளை மேம்படுத்துவதற்காக எட்டப்பட்டிருக்கும் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் புத்தாக்கங்கள், புதுமையான உத்திகளை, அனைத்து விழித்திரை அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கும் கிடைக்குமாறு செய்வதன் மூலம் இந்த இடைவெளியை நிரப்புவதே ரெட்டிகான் கருத்தரங்கின் நோக்கமாகும்.“

புரொஃபசர் டாக்டர் அமர் அகர்வால் மேலும் பேசுகையில், “ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையும், அளவுக்கு அதிகமான புகைபிடித்தல் பழக்கமுமே இந்தியாவில் விழித்திரை சார்ந்த நோய்களுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. ஆரம்ப நிலைகளில் இப்பாதிப்புக்கு ஆளாகுபவர்களுள் சிலருக்கு அறிகுறிகள் எதுவும் வெளிப்படுவதில்லை என்பதால், இந்நோய்கள் இருப்பது நீண்டகாலமாக கண்டறியப்படாமலேயே இருக்கக்கூடும். 40 ஆண்டுகள் வயதுக்கு மேற்பட்ட நபர்கள் அவர்களது பார்வைத்திறனை பரிசோதிக்க எளிய பரிசோதனைகளை கண்டிப்பாக செய்துகொள்ள வேண்டும். ஒரு கண்ணை மூடிக்கொண்டு மங்கலான பார்வை இருக்கிறதா என்று பரிசோதிப்பதன் மூலம் இதை செய்யலாம். பாதிக்கப்பட்ட நிற பார்வைத்திறன், குறைந்திருக்கிற எதிரிடை (கான்ட்ராஸ்ட்) அல்லது நிற உணர்திறன் ஆகியவை இருக்கும்போது விழித்திரை சிறப்பு நிபுணரை நோயாளிகள் கலந்தாலோசிக்க வேண்டும். நீரிழிவு (சர்க்கரை நோய்) இருக்கும் அனைத்து நபர்களும் அவர்களது இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருப்பது அவசியம். விழித்திரையில் ஏற்படுகிற ஆரம்ப நிலை மாற்றங்களை கண்டறிவதற்கு ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை தவறாமல் விழித்திரை பரிசோதனை செய்துகொள்வது அத்தியாவசியம்,” என்று கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *