தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான டெக்லிபர்டி (Tech Liberty) போட்டியில் சென்னை மாணவர்கள் சாதனை
சுதந்திரத்திற்கான மாணவர்கள் என்ற அமைப்பின் தெற்காசிய பிரிவு நடத்திய ‘டெக் லிபர்டி’(Tech Liberty) என்ற தலைப்பிலான போட்டியில் சென்னை ஐ ஐ டி, கொல்கத்தா மற்றும் டெல்லியில் பயிலும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மூன்று மாணவ மாணவியர் குழுவினர் பரிசுகளை வென்று சாதனை படைத்தனர்.
இந்திய பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் கிரிப்டோகரன்சி எனப்படும் எண்ம நாணயங்கள் முதலீடு குறித்த அரசின் கொள்கைகள் எப்படி வகுக்கப்பட வேண்டும் என்பது குறித்து, அகில இந்திய அளவில் மாணவர்களிடத்தில் போட்டி நடத்தி, அதன் மூலம் சிறந்த ஆலோசனைகளை சுதந்திரத்திற்கான மாணவர்கள் அமைப்பு பெற்று சாதனை படைத்திருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் ‘சுதந்திரத்திற்கான மாணவர்கள்’ ( Students For Liberty) என்ற லாப நோக்கற்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது. மாணவர்கள் கல்வி பயிலும் போது தங்களுக்கான கற்கை நெறியில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய கொள்கைகள் மற்றும் மாற்றங்கள் குறித்து இந்த அமைப்பு ஆண்டுதோறும் பல்வேறு வகையான போட்டிகளை மாணவர்களிடத்தில் நடத்தி வருகிறது. அந்த வகையில் தெற்காசிய அளவிலான சுதந்திரத்திற்கான மாணவர்கள் அமைப்பு 2022-ம் ஆண்டுக்கான ‘லிபர்டி இந்நோவேஷன் அண்ட் டெக்னாலஜி பாலிசிதோன் 2022’ ( Liberty Innovation & Technology Policython 2022) என்ற பெயரில் அகில இந்திய அளவில் அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளும் போட்டியை அறிமுகப்படுத்தியது. ‘டெக்லிபர்ட்டி’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த போட்டியில் முதற்கட்ட போட்டி, அறிவுசார் போட்டி, திறன் சார் போட்டி, நிபுணர்கள் நேர்காணல் என போட்டிகள், பிரிலிமினரி மற்றும் ஃபைனல் என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
இதில் இறுதி சுற்று மார்ச் 27ஆம் தேதியன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.இந்த இறுதிப் போட்டியில் மாணவர்கள் எட்டு குழுக்களாக கலந்து கொண்டனர். இவர்களுக்கு வழிகாட்டுவதற்காக கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தில் நிபுணத்துவம் பெற்ற முனைவர் அருண் விஜய்(Arun Vijay), சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்ற தீக்ஷா கெலாட்(Deeksha Gehlot), மத்திய அரசின் டிஜிட்டல் பொருளாதார கொள்கைக்கான ஆய்வுக் குழுவின் தலைவராக பணியாற்றும் முனைவர் ஜெய்ஜித் பட்டாச்சாரியா (Jaijit Bhattacharya)என மூவர் கலந்துகொண்டனர். இவர்கள் நடுவர்களாகவும் பணியாற்றினர்.
மார்ச் 26 மற்றும் 27 என இரண்டு தேதிகளில் நடைபெற்ற இந்த போட்டியில் மாணவர்கள் மூன்று வெவ்வேறு துறை நிபுணர்களிடம் கலந்துரையாடல், பயிற்சி பட்டறை, இணைய வழி உரையாடல், தொழில்நுட்ப விளக்க உரை போன்ற பல விசயங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. இறுதியில் வெற்றி பெற்றவர்களை நடுவர்கள் அறிவித்தனர். இதில் முதல் பரிசை ஐ ஐ. டி சென்னையைச் சேர்ந்த பிபுல் குப்தா(Bipul Gupta,IIT Madras) மற்றும் கொல்கத்தா நீதி அறிவியல் தேசிய பல்கலைகழகத்தைச் சேர்ந்த பிரஷாஸ்தி மிஸ்ரா(Prashati Mishra ,NUJS,KOLKATA) குழுவினர் தட்டிச் சென்றனர். டெல்லி ஜாமியா ஹாம்தர்த் பல்கலை கழக மாணவர் அன்மோல் ரத்தன் சிங்(Anmol Rottan Singh,Jamia Hemdard,Delhi), டெல்லி கிரோரி மால் கல்லூரி மாணவர் சாஹஜ் சிங்(Sehaj Singh,Kirorinal college,Delhi), டெல்லி லேடி ஸ்ரீராம்பெண்கள் கல்லூரி மாணவியான ஸ்ரீஜன் கௌர்(Srijan Kaur,lady sriram college for women delhi) ஆகியோர் அடங்கிய குழு இரண்டாவது பரிசையும், டெல்லி விவேகானந்தா இன்ஸ்ட்டியூட் ஆஃப் ப்ரொபஷனல் ஸ்டடீஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சாஹர்ஷ் பிரன்ஜுஸ்வானி (Saharsh Pranjwani,VIPS,Delhi)மற்றும் சிவம் இஸ்ஸாக் (Shivam Issar,VIPS,Delhi)ஆகியோர் மூன்றாவது பரிசையும் வென்றனர். இவர்களுக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட அருண் விஜய்9Arun Vijay) மற்றும் தீக்ஷா கெலாட் (Deeksha Gehlot) பரிசும் சான்றிதழும் வழங்கி சிறப்பித்தனர். அத்துடன் போட்டியில் இறுதிச்சுற்றுப் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
‘டெக் லிபர்டி’ குறித்து சுதந்திரத்திற்கான மாணவர்கள் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளரும், கல்வி மற்றும் ஆய்வு குறித்த பிரிவின் ஒருங்கிணைப்பாளருமான வால்டர் சைலேஷ் பேசுகையில்,” 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் லாப நோக்கமற்ற தன்னார்வ தொண்டு அமைப்பாக சுதந்திரத்திற்கான மாணவர்கள் அமைப்பு உருவானது. மாணவர்கள் மட்டுமே இந்த அமைப்பில் நிர்வாகிகளாக பணியாற்ற இயலும். இந்த அமைப்பு தற்போது அனைத்து கண்டங்களிலும் விரிவடைந்திருக்கிறது. சமூகம், பொருளாதாரம், கல்வி கற்றல் என மாணவர்கள் நேரடியாக பங்களிப்பு செய்யும் அனைத்து விசயங்களிலும் எத்தகைய மாற்றங்கள் தேவை? என்பது குறித்தும், எம்மாதிரியான கொள்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்? என்பது குறித்தும் சிறந்த ஆலோசனைகளை இந்த அமைப்பு வழங்கி வருகிறது. தற்போது நாங்கள் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளடக்கிய தெற்காசிய நாட்டை மையப்படுத்தி இயங்கி வருகிறோம். மேலும் ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் பெற்ற ஆய்வாளர்களை கொண்டு கலந்துரையாடல் நிகழ்வு, பயிற்சிப்பட்டறை விவாதம், இணையவழி கூட்டம்.. என பல்வேறு வகையான நிகழ்வுகளை நடத்தி, மாணவர்களிடத்தில் அவர்களது தேவை குறித்த புதிய கொள்கை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.
தற்போதைய சூழலில் கிரிப்டோகரன்சி குறித்த விழிப்புணர்வு அனைத்து நிலைகளும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், பொருளாதாரத்தில் தனிமனித சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை பெறுவதற்காகவும் ‘டெக் லிபர்டி’ என்ற பெயரில் அகில இந்திய அளவில் மாணவர்களுக்கான போட்டியை அறிவித்தோம். இதில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக மாணவர்கள் கலந்துகொண்டனர். தமிழகம் மட்டுமல்லாமல் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டின் எதிர்காலம் மாணவர்களின் கைகளில் என்பதால் அவர்களிடமிருந்து மாற்றத்திற்கான கொள்கைகள் உருவாக வேண்டும் என்ற நோக்கத்திற்காக ‘லிபர்டி இந்நோவேஸன் அண்ட் டெக்னாலஜி பாலிசிதோன் 2022 ‘(Liberty Innovation &Technology Policython 2022) போட்டியை ஒருங்கிணைத்தோம். இது போன்றதொரு போட்டியை 2020 ஆம் ஆண்டில் மெய்நிகர் பாணியில் சிறப்பாக நடத்தினோம். எங்களின் சிறப்பான செயல்பாட்டை கண்டு பாராட்டிய அமெரிக்க தொண்டு நிறுவனம் ஒன்றின் நிதி உதவியுடன் தற்போது இந்த போட்டியை நடத்தி இருக்கிறோம். மேலும் இறுதிப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் வழங்கும் ஆலோசனைகளை தேர்ந்தெடுக்க அருண் விஜய், தீக்ஷா கெலாட், ஜெய்ஜித் பட்டாச்சாரியா என மூன்று துறைசார் நிபுணர்கள் நடுவர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.
இதனிடையே இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட கல்லூரிகளுக்கும், கல்லூரியின் சார்பாக கலந்து கொண்ட மாணவர்களுக்கும் விமான பயண கட்டணத்தை சுதந்திரத்திற்கான மாணவர்கள் அமைப்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.டெனிஸ் ஜோஸ் (Dennis Jose)சிறப்புரை ஆற்றினார்