0
0
Read Time:1 Minute, 20 Second
வில்வித்தையில் தங்கம் வென்ற வேலம்மாள் பள்ளி மாணவன்
அண்மையில் பொள்ளாச்சியில் உள்ள பி.ஏ.கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தைச் சங்கம் வில்வித்தைப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இப்போட்டியில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் இடம்பெற்றன.
இந்த வில்வித்தைப் போட்டியில் சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் செல்வன் . சாய்ஸ்ரீ கார்த்திக் 2வது தமிழ்நாடு உள்ளரங்க வில் வில்வித்தைச் சாம்பியன்ஷிப் 2022 – ல் நடைபெற்ற ரீகர்வ்போ சுற்றில் 14 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் மிக்ஸ் ஸ்பாட் போட்டியில் கலந்துகொண்டு திறமையாக விளையாடி தங்கம் வென்றுள்ளார்.
இவரது சாதனைக்குப் பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.