75ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒரு நாள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது
சமூக செயற்பாட்டாளர் சரவணன் ஏற்பாட்டில் இந்திய நாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒரு நாள் கலை நிகழ்ச்சிகள் சென்னை அடையாரில் உள்ள குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது…
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா,தமிழக கூட்டுறவு துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், நந்தகுமார் ஐஆர்எஸ், தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்க தலைவர் நாகராஜ் மற்றும் பிரபல சின்னத்திரை நட்சத்திரங்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு ஆதரவற்ற குழந்தைகள் நடத்திய நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்
8 ஆதரவற்ற முகாம்களைச் சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகள் சுமார் 750 பேர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இன்றைய தினம் ஒரு நாள் முழுவதும் குழந்தைகளுக்கு தேவையான உணவுகள் வழங்கப்பட்டன..