நான்காம் வகுப்பு மாணவன் 105 உலகப் பொதுமறை திருக்குறளை சொல்லிக்கொண்டே 5 ரூபிக் கனசதுரங்களை சரி செய்து உலக சாதனைக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளார்
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த பாலு பிரகாஷ் இவர் சிவில் இன்ஜினியரிங் வேலை செய்து வருகிறார், இவரது மனைவி கோகிலா தம்பதிகளின் மகன் டி.பி யுகன்சக்தி தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு பயன்று வருகிறார்
உலக சாதனையில் இடம் பிடிக்க வேண்டி பெற்றோர்கள் பல்வேறு பயிற்சிகளை சிறுவனுக்கு அளித்து வருகின்றனர்
ட்ரையம்ப் உலக சாதனை நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்த நிலையில் உலகப் பொதுமறை நூலான 105 திருக்குறளை சொல்லிக்கொண்டே ஐந்து ரூபிக் கனசதுரங்களை கையில் வைத்து ஐந்து நிமிடம் 30 விடாடியில் சரி செய்து முடித்திருக்கிறார்
இதனை அங்கீகரிக்கும் வகையில் ட்ரையம்ப் உலக சாதனை நிறுவனம் இதனை சாதனையாக அங்கீகரித்துள்ளது
சிறுவனுக்கு ட்ரையம்ப் உலக சாதனை நிறுவனம் சான்றிதழ் மற்றும் கோப்பையை வழங்கி கௌரவித்துள்ளது