உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சுற்றுச்சூழல் குறித்தான விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி
ஓவியக் கலைஞர் சாந்தி சரவணன் வரைந்த உலக சுற்றுச்சூழல் குறித்த ஓவிய கண்காட்சி சென்னை அடையாறு இந்திரா நகரில் நடைபெற்றது. இக்கண்காட்சியை வருமான வரித்துறை துணை ஆணையாளர் நந்தகுமார் IRS மற்றும் பேராசிரியர் ரங்கநாதன் கலந்துகொண்டு ஓவியக் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்
இந்த ஓவிய கண்காட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சுற்றுச்சூழல் சார்ந்த ஓவியங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன. SANTSAR art series முறையில் பிரம்மாண்டமாக கண்காட்சி நடைபெற்றது
ஓவியக் கண்காட்சியை காண்பதற்காக வருகைதந்த குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் பற்றிய அறிவுரைகளும் அதனை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஓவிய கண்காட்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல் ஓவியக் கண்காட்சியில் பங்கேற்ற அனைவருக்கும் ஓவியம் குறித்தான பிரசுரம் வழங்கப்பட்டது